கலிவெண்பாவில் - வேதாகம எண்ணாகமம்

இசுரேலினத்தார் முதல் மக்கட்தொகைக் கணக்கிடுதலும் இனத்தலைவர்கள் நியமித்தலும்

இரண்டாம் வருடம் வனத்தில் திரிய
இரண்டாம் திருமாதம் முன்னாள் -திருக்கூடம்

தன்னில் இருந்து இறைவன் பகன்றாரே
தன்தாசன் மோசே யிடம்சொன்னார் -நன்றே

இசுரேல் இனத்தார் தொகையிடுவாய் என்றார்
இசுரேல் இனத்தொகை மெய்யோர் -இசுரேலாண்

நற்றாண் இருபது மேலுட் டொகையிட்டு
நற்படைக்கு வைப்பாய் தலைவரை -நற்றினத்தில்

சேதேயூ வித்தோன் எலிசூர் தெரிந்தேன்நான்
மாதோனாம் ரூபன் இனத்தவனே -வேதவர்

சொல்ல தெரிந்திட்ட நற்றலை மூத்தவன்
வல்லாண் படைமூப்பன் தன்னருகே -வல்லவன்

சொல்லாளாம் சூரிசதா நற்றாண் செலூமியேல்
வாளோன் சிமியோன் இனத்தானாம் -வல்லவனை

நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
அன்றியும் நல்லினத்தார் தன்னிலே -நன்றானோன்

அம்மினதாப் வித்தோன் நகசோன் தனைதேர்வாய்
அம்மனிதன் யூதா இனத்தானே -அம்மாந்தன்

தன்னை தெரிவாய் தலைவனாக நற்சொல்லே
தன்கேள்மின் மக்காள் இறைப்பகன்று -நன்றாய்

இனத்தானாம் சூவாரின் வித்தோன் நெதன்யேல்
இனமிசக்கார் தன்னின் சிறந்தோன் -இனத்தாரில்

நன்றே தெரிவாய் தலைவனாக நற்றாண்
இனத்தானாம் ஏலோன் எலியாப் -இனத்தில்

இனமாம் செபுலோனின் நல்லோன் தெரிவு
இனத்தாரில் நற்றலைவர் சொன்னார் -இனத்துள்ளே

நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
நன்றாகக் கீழ்படிந்தார் மக்களும் -அன்றியும்

யோசேப் இருமைந்தர் யாக்கோபு பேசியே
யோசேப்பின் கையிட்டு சொன்னச்சொல் -யோசேப்பே

இவ்விருவர் என்மக்கள் என்றதால் நல்லினத்தில்
இவ்விருவர் சேர்ந்தார் இனம்தானே -இவ்வின

அம்மியூதின் வித்தோன் எலிசாமா உள்ளானே
அம்மாந்தன் எப்பிராயீம் நற்றலை -தம்பி

மனாசே இனத்தில் பெதாசூர் கமால்யேல்
நினைந்தே தெரிந்தேன் தலைவன் -வனத்தில்

இனத்தானாம் கீதெயோனின் வித்தோன் அபீதான்
இனமது பென்யமீன் தன்னின் -இனத்தாரின்

நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே

இனமதுதாண் தன்னிலே அம்மிசதாய் வித்தோன்
இனத்தான் அகியேசேர் தன்னை -இனத்தாரின்

நற்றலையாய் தேர்ந்தெடு என்சொல் இறைச்சொல்லை
நற்றாரும் கீழ்படிந்தார் ஆங்கேதான் -நற்றார்

இனமது ஆசேரில் ஓகிரானின் வித்தோன்
இனத்தானாம் பாகியேல் தன்னை -இனத்தாரின்

நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே

இனமது காத்தில் தெகுவேலின் வித்தோன்
இனத்தான் எலியாசாப் தன்னை -இனத்தாரின்

நன்றே தெரிவாய் தலைவனாக நற்சொல்கேள்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றே

இனமது நப்தலியில் ஏனானின் வித்தோன்
இனத்தான் அகீரா தனையே -இனத்தாரின்

நன்றே தெரிவாய் தலைவனாக நல்லிறைச்சொல்
நன்றாகச் செய்தார் இறைச்சொல்லை -அன்றியும்

மோசேயும் ஆரோனும் பேர்பேராய் எண்ணிக்கை
பேசியதைக் கேட்டங்கு கூட்டிப்போய் -தேசத்தார்

மக்கட் தொகைக்கணக்குச் செய்தனர் ஆங்கேதான்
மக்களும் சொன்னார் தொகை
1

இனத்தார் நின்றிருக்கும் திசையும் பயண முறையும்

இருபது மேல்வயது ஆண்கள் கணக்கே
இருபது மேல்வயது ஆண்கள் - நரனோர்

எழுபத்து நாலா யிரத்தறு நூறு
விழுத்தொகை யூதா இனத்தில் -விழுத்தொகை

ஐம்பத்தி நாலா யிரத்துநா னூறாமே
மேம்மான் இசக்கார் இனத்தில்தான் -ஆம்தொகை

ஐம்பத்தி ஏழா யிரத்துநா னூறாமே
மேம்மான் செபுலொன் இனத்திலே -மேம்மானோர்

மூவின யூதா இசக்கார் செபுலோன்சேர்
தேவனின் கூடாரம் கீழ்திசை -மேவியே

நின்றிருப்பர்; யூதாவின் நற்கொடி கீழ்செய்வர்
நன்பயணம் தேசத்திற் சீராக -அன்றங்கு

நாற்பத்தி ஆறா யிரத்தைனூ றாகவே
சேற்றானாம் ரூபன் இனத்தொகை -மேற்றாண்கள்

ஐம்பத்தி ஒன்பது மாயிரத்து முன்னூறே
மேம்மான் சிமியோன் இனத்திலே -மேம்மானோர்

நாற்பத்தி ஐந்தா யிரத்தறு னூற்றைம்ப
ஏற்றோனாம் காத்தின் இனத்திலே -மேற்றாண்சேர்

மூவினர் ரூபன் சிமியோனும் காத்சேர்த்து
தேவனின் கூடாரம் தென்திசை -மேவியே

நின்றிருப்பர் ரூபனின் நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -மேற்றாண்கள்

நாற்பத்து ஆயிரத்தை னூறே கணக்கிட்டு
ஏற்றினம் எப்பிராயீம் தன்னின்கேள் -மேற்றாண்சேர்

முப்பத்தீ ராயிரத்து னூறிரண்டு மக்களே
தப்பார் மனாசே இனத்தாரே -அப்போதே

முப்பத்தை யாயிரத்து நானூறு மக்களே
தப்பாராம் பென்யமீ னார்தானே -தப்பாது

மூவினர் பென்யமீன் எப்பிராயீம் சேர்மனாசே
தேவனின் கூடாரம் மெற்றிசை -மேவியே

நின்றிருப்பர் எப்பிராயீம் நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -நன்றே

அறுபத்தீ ராயிரத் தேழுனூறு மக்கள்
சிறந்தோனாம் தாணின் இனத்தார் -சிறந்தோராம்

நாற்பத்தோ ராயிரத் தைந்நூறு மக்களே
ஏற்றினம் ஆசேரின் தன்தொகை -மேற்றாண்சேர்

ஐம்பத்து மூவா யிரநானூ றேயங்கு
மேம்மானாம் நப்தலி யின்தொகை -ஆம்மாந்தர்

மூவினர் தாணொடு ஆசேரும் நப்தலியும்
தேவனின் கூடம் வடக்காக -மேவியே

நின்றிருப்பர் தாணின நற்கொடியின் கீழ்ச்செய்வர்
இன்பயணம் தேசத்திற் சீராக -நன்றே

இறைவனார் சொல்படியே லேவியர் தன்னை
நிறைமக்கள் எண்ணிக்கை செய்யா -திறைச்சொல்லிற்

கீழ்படிந்தார் மோசேயும் ஆரோனும்; லேவியினம்
வாழ்வரே கூடாரச் சுற்றியே -வாழ்வின

யூதா தலைசேனை முன்செல்ல பின்னேதான்
வேதா இனரூபன் சென்றிட -வேதவரின்

கூடத்தோ டங்கே இனலேவி பின்செல்ல
கூடமது தங்கும் இடையிலே -கூடம்பின்

எப்பிராயீம் தன்னின் படைநான்கு சென்றிட
தப்பாது தாணின் படைபின்னே -எப்போதும்

சென்றிடல் வேண்டும் பயணத்தில் என்பகன்றார்
நன்கர்த்தர் செல்லும் விதம்
2

ஆரொன் வழியோரும் லேவியரின் பணியும்

ஆரோன் வழிமக்கள் நால்வர்; திருவேலை
ஆரோன் வழியாரே செய்திட -நேரோர்

இறைவன் உரைத்ததால் செய்தனர் வேலை
இறைவன் திருக்கூடத் தில்தான் - நிறைமக்கள்

நாதாப் அபியூ எலியாசார் இத்தாமார்
வேதனின் நால்வர் இவர்களே -வேதவர்

கூடத்தில் நாதாப் அபியூ கறைத்தீயை
நாடியதால் செத்தால் வனத்திலே -நீடியோன்

பின்பிறந்த மக்கள் எலியாசார் இத்தாமார்
முன்செய்தார் ஊழியம் கர்த்தருக்கு -அன்றியும்

சீனாய் வனத்திலே தானே நடந்தவை
கானான் புகுமுன் னிவைதானே -மேனாணாம்

லேவி குலமக்கள் மேவி உதவுவர்
தேவனின் கூடம் தொழுகைக்கு -தேவனின்

கூடத்தில் உள்ள பணிமூட்டு எல்லாமே
ஆடவராம் லேவி சுமந்திட -நாடில்

திருத்தூயக் கூடப் பணிமூட்டை மற்றோர்
திருக்குலைக்க தொட்டாலே கொன்று -திருக்கூட

வேலைகளில் லேவி உதவிட ஆரோன்கை
சீலோரை விட்டிடச் சொல்
3

லேவியர் எண்ணிக்கை தொகையும் நிற்கும் திசையும்

எகிப்தில் இறையான் தலைமக்கள் கொண்டேன்
எகிப்தில் இறைசொன்னேன் நீவிர் -தொகைத்தலை

மக்கள் அனைவரும் தந்திட; மக்களே
மக்களாம் லேவியை ஈடாக -தக்காரை

என்னூ ழியசெய்ய லேவி இனத்தாரை
என்றென்றும் என்னினமாய்க் கொண்டேன்நான் -நன்கர்த்தர்

யானே அறிவீர் உரைத்தவர் லேவியை
நானெடுத்தேன் ஈடாகத் தானிங்கு -மேனாணாம்

லேவியர் தன்னை கணக்கிடு சீனாயில்
லேவியர் மக்கள் ஒருமாதம் -மேவிப்

பிறப்பெல்லாம் செய்கணக்கு என்றிட மோசே
சிறப்பாகக் கீழ்படிந்தான் ஆங்கு -சிறப்பின

மக்கள் பெயர்கெர்சோன், கோகாத், மெராரியென
மக்கள் குலத்தலைவர் லேவியின் -மக்கள்

தொகைசெய்ய மோசேயும் கீழ்படிந்து தக்கார்
தொகையிட்டான் நன்றாக ஆங்கு -தொகைக்கணக்கு

கெர்சோன் குலமக்கள் ஏழா யிரத்தைநூறு
கெர்சோன் குலமக்கள் மேற்றிசையில் -கர்த்தரின்

கூடப் புறப்பின்னே நிற்கச்சொல்; சொல்படி
கூடப் புறப்பின்வாழ்ந் தாரங்கு -மாடமாம்

கூடத்தை காவலே கெர்சோன் குலவேலை
கூட வெளிசுற்று மேற்றிரை -கூடத்தை

மூடு திரைசேர்த்து காத்துப் பணிசெய்தார்
ஆடவர் கெர்சோன் குலத்தினர் -நாடார்

குலமக்கள் கோகாத் தினநால்வர் தன்னின்
குலத்தொகை எண்ணா யிரமும் -நலமாந்தர்

முந்நூறும் தானே; குலத்தவர் காத்தாரே
செந்தூய் இடப்பொருளைத் தானங்கு -அந்தபடி

கூடப் புறத்தென் திசைநிற்க; சொல்படி
கூடப் புறம்பே இனம்வாழ்ந்தார் -கூடத்தின்

தூண்கள் பலகைபாதம் தாழ்ப்பாள்கள் மீந்தவை
மாண்பார் மெராரி குலத்தினர் -மாண்பாரை

கூடப் புறத்தே வடதிசை நிற்கச்சொல்
கூடப் புறம்பே இனம்வாழ்ந்தார் -கூடத்தின்

கீழ்திசையில் மோசேயும் ஆரோனும் வாழ்ந்தனர்
கீழ்படிந்து ஊழியம் செய்து
4

இசுரேலில் அதிகமாக இருந்த ஆண்மக்களுக்கு ஈடாக ஐந்து சேக்கல் வெள்ளி வசூலித்தல்

லேவியர் மக்கட் தொகைகணக்கு எண்ணிக்கை
சேவா யிரநல் லிருபத்தீர் -லேவியர்

தன்னை எடுத்தேன்நான் ஈடாய் தலைமக்கள்
முன்சொல் விடுத்துச் சிறந்தவர் -நன்சொல்

முதற்பிறந்தோர் தன்னை கணக்கிட ஆங்கே
முதற்பிறந்தோர் எண்ணிக்கை தானே -அதிகம்

இருநூற் றெழுபத்தி மூன்று மனிதர்
இருந்தார் இசுரேலில் தானே -திருச்சொல்

இசுரேல் தலைப்பிள்ளை ஒவ்வோர் தலைக்கும்
இசுரேலர் வெள்ளி கொடுக்க -இசுரெலர்க்கை

வாங்கியோன் மோசேயும் ஆரோன் புதல்வர்கை
ஆங்கே கொடுத்தான் பணம்தனை -வாங்க

தலைச்சன் பிறந்த மனிதர்க்கு ஈடாய்
தலைச்சன் அதிக தொகைக்கு -தலைதலை

ஐந்து படிவெள்ளி சேர்த்தனன் ஆரோனின்
மைந்தர்க்கை தன்னில் கொடுத்து
5

கோகாத் கெர்சோன் மெராரி இனத்தவரின் எண்ணிக்கையும் சுமக்க வேண்டியவையும்

கோகாத் இனத்தார் தொகையிடு மோசேநீ
கோகாத் இனத்தார் தொகையிட்டான் -கோகாத்

இனத்திலே முப்பது நல்வயது உள்ளோர்
இனவயதோர் ஐம்பது கீழ்ச்செய் -இனத்தார்

திருக்கூடம் தன்னிலுள்ள தூய்பொருட்கள் காப்பர்
திருக்குலத்தார் போகையில் ஏந்த -திருமாதூய்

மேலிடத்தை ஆரோனின் நல்லோர் திரைநீலம்
தோலிட்டு மூடிடச் சொல்லிடு -மேலாம்

விசுப்பலகை பெட்டி விளக்கினது தண்டு
மிசைப்பொருட்கள் எல்லாம் திரையால் -இசைச்சுருட்டி

பின்னரே கோகாத்தின் கைத்தரச் சொல்வாய்நீ
நன்மக்கள் ஆரோன் வழியரை -நன்றே

இனமக்கள் கோகாத் தவர்சாகா வண்ணம்
தினப்பயணம் செல்லும்முன் ஆரோன் -இனமக்கள்

செய்யச்சொல் மூடிடவே நன்றாய்; இனமக்கள்
செய்யாது போனால் மடிந்திடுவர் -செய்தே

இருந்தோர் தொகையிட்டான் கோகாத் தினத்தார்
இரண்டா யிரத்தெழு நூறும் -இருந்தாரே

ஐம்பது கூடுதல் ஆண்மக்கள் நற்படை
மேம்மக்கள் ஆங்கே கணக்காக -மேம்மானாம்

ஆரோன் மகனாம் எலியேசர் கூடத்தில்
நேரான மாதூய் இடத்திலே -நேரவன்

ஊழியம் செய்திடச் சொல்வாய்நீ அன்றாட
வாழியல் நற்பலி தந்தங்கு -வேழாண்

இனமக்கள் கெர்சோன் இனக்கணக்கு செய்வாய்
இனத்திலே முப்பது மேலே -நினைந்தே

இனவயதோர் ஐம்பது கீழுள்ளோர் சேர்த்து
இனக்கணக்கு செய்வாய் நினைந்து -இனத்தார்

திருப்பயணம் செல்லும்போ கெர்சோன் இனத்தார்
திருக்கூடத் தின்திரைகள் எல்லாம் -திருக்கூட

மேற்கூரை வாயிற் றிரைசேர்த்து உள்வட்ட
மேற்றிரைகள் சேர்த்து சுமந்திட -மேற்றாணாம்

ஆரோன் புதல்வனாம் இத்தாமார் கெர்சோனின்
நேரான ஊழியம் தன்னையே -நேராணாய்

நின்று கவனிக்கச் சொல்வாய்நீ கெர்சோனின்
நன்மக்கள் மேற்பார்வை செய்திடச்சொல் -நன்றே

திருப்பயணம் போது மெராரி இனத்தார்
திருக்கூட சட்டங்கள் எல்லாம் -திருக்கூட

பாதங்கள் தாழ்ப்பாளும் தூணெல்லாம் மேற்சுமக்க
வீதமாய் செய்திடச் சொல்வாய்நீ -வீதம்

மெராரிக்கும் இத்தாமார் தானே தலைவன்
மெராரியின் ஊழியம் தன்னை -சரிபார்த்து

நின்று கவனிக்கச் சொல்வாய்நீ இத்தாமார்
நன்மக்கள் மேற்பார்வை செய்திடச்சொல் -அன்றியும்

ஈரா யிரத்தெழு நூற்றைம் பதுபேரே
சீராண்கள் கோகாத்தின் எண்ணிக்கை -சீராண்கள்

ஈரா யிரத்தறு நூறும்சேர் முப்பதே
நேராண்கள் கெர்சோன் இனத்தவர் -நேராண்கள்

மூவா யிரத்திரு நூறே மெராரியின்
சேவைசெய்த் தக்காரின் எண்ணிக்கை -சேவைசெய்

மக்கள் தொகையைக் கணக்கிட்டார் மோசேயும்
தக்கவனாம் ஆரோனும் சேர்த்து
6

தொழுநோயாளிகள் நகர்விட்டு விலக்குதலும் பாவப் பரிகாரமும்

தொழுநோய் பிடித்த மனிதர் விலக்கு
விழுவித்து செய்தோனைச் சேர்த்து -வழுவாது

செய்தார் நகர்விட்டு மாந்தரை மெய்மக்கள்
மெய்தீட்டு தன்னை விலக்கிடுவீர் -மெய்யார்

இறைவனின் கட்டளை மீறியோர் தன்னை
கறைபாவம் போக்கவே ஐந்தில் -நிறையொரு

பங்குதனை ஏமாந்தோன் கைச்சேர்க்கச் சொல்லிடு
அங்கவன் பாவந்தீர் செய்திட -அங்கவனின்

பங்குதனை வாங்கிட பங்காளி இல்லையென்றால்
பங்குதனை ஆசரியன் கைச்சேர்த்து -பங்கோடு

ஆடொன்றை சேர்கொடுக்கச் சொல்வாய் புவிதனில்
நாடுள்ளே நேமம் இதுவேகேள் -நாடனின்

பங்கோடு ஆடது பங்காமே ஆசனுக்கு
அங்கேசேர் ஏறெடுக்கும் எல்லாம்போல் -பங்கெல்லாம்

தூயதே கேள்மின்னே மக்காள் இறைச்சொல்லை
தூயவர் சொன்னார் நிறை
7

கற்பு தவறிய பெண்களுக்கு அடுத்த சட்டம்

பல்வித மக்கள் வசிக்கும் நிறைதேசம்
அல்செய் மகளிர் இருப்பரங்கு -அல்செய்

களவாய் பிடித்தாலோ; அல்செய் நிலையில்
வளவன் எரிந்தால்கீழ் செய்வீர் -களவி

வளவன் மனையாள் தனைக்கூடம் முன்னே
களவிக் கலந்தாளை சேர்த்து -களவில்லாள்

என்றாலும் வேந்தனின் ஐயத்தால் சேர்ப்பீரே
நன்கூடம் முன்னால் விரைந்திட்டு -தன்கை

கதிர்கட்டு தானே சினத்திற்காய் துட்டு
மதிசினம் ஆறிட வந்தால் -அதைகேட்க

ஆசரியன் கைவாங்கி ஆங்கே பலிபீடம்
ஆசன் எரிப்பான் சிறிதெடுத்து -மேசைமேல்

மண்பாண்டம் தன்னில்தூய் நீர்வார்த்து ஆசரியன்
மண்சிறிது தூய்க்கூட முன்னெடுத்து -தண்ணீர்சேர்

பெண்ணிடம் பொய்யுரைத்தால் போவாய்நீ கெட்டழிந்து
பெண்பருக நீர்கொடுக்க; மண்சேர்ந்த -தண்ணீரை

பெண்பருகி பொய்யாளாய் அல்செய்தால் கற்பிழந்தோள்
மண்ணீரால் போவாள் அழிந்தங்கு -பெண்ணுள்ளே

உண்டான வன்புணர்வு வித்தும் அழிந்திடும்
பெண்ணவள் போவாளே வீண்மகள் -தண்ணீரை

பெண்பருகி மெய்யவளாய் அல்செய்யா கற்பினாள்
மண்ணீரால் வீணாகா வாழ்வாளே -பெண்ணவள்

கற்பினள் வித்தழியா வீண்பழி என்றாகும்
கற்பினள் வாழ்வாள் சிறந்து
8

நசரேய நோன்புச் சட்டம்

நசரேய நன்நோன்புச் செய்யப் பொருந்தி
இசைவாக இன்நோன்பு செய்ய -நசரேயர்

எந்நாளும் கொள்ளார் திராட்சை ரசத்தாலே
எந்தவகைப் பண்டம் விடுத்தவன் -அந்தபடி

நல்லார் திராட்சை செடியினது வேர்தொடங்கி
செல்கொடி யாதும் புசியாதே -நல்லார்

நசரேயர் வாழ்வாரே தூயராய் என்றும்
இசைவாக நோன்பு நிலைத்தே -இசையாத

சாவினது தீட்டுப் படலாகா அம்மாந்தன்
சாவது பெற்றோரே ஆயினும் -சாவது

சோதரர் ஆயினும் தீட்டுப் படலாகா
வேதன் நசரேயன் மேல்தானே -வாதை

சவரகன் கூர்கத்தி என்றும் தலைமேல்
எவரும் இடாதபடிச் செய்வீர் -சவரம்

தனைச்செய்யான் நோன்புடை மாந்தனும் நேரே
நனிசெய்ய நோன்பு உயர்வு -எனினுமே

சாவது எப்படியோ இந்நோன்பை தீட்டாக்கின்
சாவினால் தீட்டானோன் செய்திடட்டும் -சாவுதீட்டு

வான்புறாவீர் இல்லை பலியிரண்டு வெல்வனந்
தான்மேற் புறாவைக் கொணர்ந்துவர -தான்தூயாய்

ஏழாம்நாள் தன்னில் நசரேயன் ஆசன்கை
வேழாணும் தந்திட தீட்டது -தாழாதே

ஆசன் அசைவாட்டி தூயாக்கி கையெடுக்க
தேசத்தான் நோன்பு தொடர்ந்திட -தேசத்தான்

நோன்பு முடிந்தப்பின் காத்தவன் ஓராண்டு
மேன்வகை ஆடு எரிபலி -ஆன்றோர்

அமைதிபலி பாவபலி சேர்த்தங்கு ஊணும்
சமைத்துத் தருவான் பலி
9

மக்களை வாழ்த்தும் முறை

ஆரோன் திருப்புதல்வர் கேட்கச்சொல் தேசத்தார்
நேராணும் செய்ய நிலைவாழ்த்து -நேராணும்

சொல்லட்டும் பேர்வாழ்த்து; கர்த்தர் உனைவாழ்த்தி
வல்லார் உனைக்காப்பார் நன்றாக -நல்லாரும்

தன்முகத்தை உன்மேல் மிளிரச் சிறந்தவர்
உன்மேல் இரக்கம் உடைத்தாகி -தன்முகம்

உன்மேலே காட்சி யிடுத்தவர் நல்லமைதி
உன்மேல் வரச்செய்யட் டும்நன்றாய் -என்றென்றும்

இப்படிநீர் கர்த்தர் திருப்பெயரை சொல்லிட்டு
தப்பாது வாழ்த்தினால் நல்லாரும் -அப்படியே

வாழ்த்துவார் நல்லிறைவன் கர்த்தரவர், மேலினத்தார்
வாழ்தேசத் தாரைச் சிறந்திறைவன் -வாழ்கர்த்தர்

ஈதே கொடுத்திட்டார் ஆசரியன் தேசத்தார்
வேதவர் பேர்வாழ்த்தச் சீர்
10

ஆசரிப்பு கூடாரம் நாட்டிய போது பன்னிரெண்டு குலத்தார் தந்த காணிக்கைகள்

திருக்கூடம் தன்னை முடித்தானே மோசே,
திருக்கூடம் செய்து முடித்தத் -திருநாளில்,

வம்சத் தலைவர்கள், இஸ்ரேல் பிரபுக்கள்
தம்கையால் காணிக்கை சேர்த்திட -வம்சத்தார்

தங்களின் காணிக்கை ஆறுகூண்டு வண்டில்கள்,
பங்கமிலா பன்னிரண்டு மாடுகள் -தங்களின்

ஈரீர் பிரபுக்கள் வீதமாய் ஒவ்வொரு
சேரவர் வண்டில்கள் தந்திட -சேரவர்

ஒவ்வொரு நன்பிரபு ஒவ்வொரு மாடுமாக,
அவ்வாறே கர்த்தருக்குச் தந்திட -அவ்வாண்

திருக்கூடம் முன்பாகக் கொண்டுவந்து சேர்க்க
திருவும் பிரிக்கப் பகன்று. -திருச்சொல்

திருக்கூடம் தன்னில் பணிசெய்யும் மக்கள்
திருலேவி நல்லினத்தார் கையில் -திருமுன்னே

தந்திட்ட காணிக்கை வேலைக்குத் தக்கதாய்
தந்திடுவாய் மோசே சிறந்தங்கு. -தந்தான்

இருவண்டில் கைக்கொடுத்தான் கெர்சோன் இனத்தார்
இருமடங்கு மெர்ராரி தந்து -இருமடங்காய்

மாடுகளை இவ்வினத்தார் கைத்தந்து பங்கிட்டு
வாடவே கோகாத் விடுத்தவன் -ஈடில்லா

கோத்திரத்தின் நன்தலைவர் பன்னிரெண்டு நல்லார்கள்
கோத்திரத்தின் சார்பாக செய்தனர் -மேத்தவர்

நல்லிறையோன் கூடம்சேர் காணிக்கை பன்னிரெண்டு
நல்லவர்கள் செய்தார் சமமாக -நல்லாரின்

சேர்சேக்கல் நூறொடு முப்பது வெள்ளியால்
ஆர்த்தாலம் இட்டு எழுபது -சேர்சேக்கல்

கிண்ணங்கள் தந்திட்டார் சேன்நாறு வர்க்கமும்
திண்ணமாய் தங்கத்தில் பத்தாக -திண்ணம்

சமமாகத் தந்தாரே பொன்வெள்ளி தன்னை
சமமாகத் தந்தாரே மாக்கள் -சமமாமே

பன்னிரெண்டு கோத்திரத்தார் ஒவ்வொரு நாளிலும்
தன்வகை ஈந்த பலியதும் -அன்னார்

பலியது காளை எரித்திட ஈந்து
பலியது பாவம்தீர் வெண்மே -பலியாம்

அமைதிக்காய் மாடிரண்டும் ஐந்தாய் கடாக்கள்
அமைவெண்மே குட்டியோர் ஆண்டு -அமைந்தவர்

ஒவ்வொரு நாளும் ஒருபிரபு வந்தனர்
அவ்வாறே தத்தம் பலிசெலுத்த -ஒவ்வொரு

நாளும் சமமாமே காணிக்கை கர்த்தர்முன்
நாளுமே செய்தார் பலிதந்து -நாளும்

இறைசொல் இரக்க இருக்கை கெருபீன்
இறைநடுவே பேச, இறையாண் -இறைச்சொல்

செவிகேட்பான் மோசே சிறப்பாக நாளும்
புவிமீது கூடத்தில் தூய்
11

விளக்கு ஏற்றும் முறையும் லேவியரை தனக்கென கர்த்தர் பிரித்தலும்

இறைவன் பகன்றார் திருமோசே கேளாய்
இறைப்பணி செய்யத் திருச்சொல் -இறைமுன்னே

ஏழு விளக்குகள் தண்டினது நேர்எரிய
வேழாணாம் ஆரோ னிடம்சொல்வாய் -வேழாண்

இறைப்பணியாள் ஆரோனும் சொன்னபடி நேராய்
இறைக்கூடம் தன்னில் விளக்கு -இறைச்சொல்

படியேற்ற, நல்விளக்கு மாதிரியோ மோசே
அடியான்காண் போல்பொன் அடித்த -கடிவிளக்கு.

பின்சொன்னார் கர்த்தர் திருமோசே நோக்கியவர்
என்சொல் படியே பிரித்தெடு -நன்குலத்தான்

லேவியரை சுத்தம்செய் என்றவர் செய்முறை
லேவியர்க்கு சொன்னார் இறைவனும் -மேவிமேல்

நீர்தெளித்து விட்டிடு மேல்முடி நீக்கியவர்
சீர்க்கூடம் வந்திடச்சொல் ஆடைகள் -நேர்துவைத்து

சீர்க்கூடம் வந்திடுங்கால் காளை பலிதர
பார்மாவு கொண்டவர் இட்டிடச்சொல் -சீராண்கள்

பாவந்தீர் இன்னொரு காளை தனைநீயும்
மேவியிடச் செய்வாய் கரங்களை -பாவந்தீர்

காளைமேல் லேவியர்க்கை. பின்னர் இசுரெலின
ஆளவர் லேவியர்மேல் இட்டிடச்சொல் -கோளாணாம்

ஆரோன் திருமுன்னே லேவியர சைவாட்டி
நேராண் திருமக்கள் தந்திட்டு -சீராணும்

நேராண்கள் பாவந்தீர் ஒன்றையும் மற்றதை
நேராண் எரிபலியாய்த் தந்திடச்சொல் -சீராய்

இறைச்சொல் பகன்றார் திருமோசே கேளாய்
இறைமக்கள் என்னுடையோர் லேவி -சிறைவிட்ட

கீழ்நாடு விட்டிடும் போசொல் கருவிட்டு
வாழ்வ முதல்பேர் எனதென்றேன் -வாழ்வ

கருமுதற்பேர் தன்னை எடுக்காமல் லேவி
கருவில் வருமக்கள் மட்டும் -திருயிறைக்கு

காணிக்கை கூடத்தில் வேலைக்கு ஆரோன்கை
பேணவே தத்தமாய் ஈந்திட்டேன் -பேணிட

லேவியரின் கட்டளை ஈதே திருக்கேளாய்
லேவி அகவையாம் ஐந்தைந்து -மேவியர்

கூடத்தே வேலைசெய்ய, ஐம்பதிற்கு மேலகவை
கூடத்தை காத்திடச் சொல்
12

வனாந்திரத்தில் ஆசரித்த முதல் பாசுகா

விட்டுவந்து ஆண்டாயிற் றீராமே சீனாயின்
வெட்டவெளி தன்னில் இறையனார் -தட்டாமல்

பாசுகா திங்கள் முதல்பதி னான்கிலே
ஆசரிக்கச் சொல்வாய் சிறந்தவரை -நேசத்தான்

மோசேயும் சொல்கேட்டுச் சொன்னான் இசுரேலே
மோசேயான் கேட்டேன் இறைச்சொல்லே -தேசத்தார்

ஆசரிப்பீர் பாசுகா நல்விருந்து சீனாயில்
ஆசரித்தார் மக்கள் வனத்திலே -தீசு

பதினான்கில் தீட்டாக நின்ற சிலரோ
பதியில் சவத்தாலே தீட்டே -அதினாலே

பாசுகா காணிக்கை இட்டிடாமல் போவதென்ன
நேசத்தால் வந்து புலம்பிட -நேசமிகு

மோசேயோ தேசத்தார் நோக்கிச்சொல்: தேசத்தார்
தேசத்தார் தேவன்சொல் கேள்சொல்வேன் -தேசத்தார்

காத்திருக்கச் சென்றான் நிறைகூடம் உள்ளேதான்
காத்தச் செவியைத் திறந்தவனும் -காத்தவன்

காக்கும் நிறைமகனை நோக்கி இறையனார்
மேத்தவம் பாசுகா நாளிலே -ஏத்தபடி

இல்லாத மக்கள் இரண்டாம் நனிதிங்கள்
நல்லபடி செய்திடச் சொல்வாய்நீ -அல்லாது

தீட்டு, பயணத்தால் ஆசரிக்கா மக்களவர்
நாட்டில் இரண்டாம் நனிதிங்கள் -வீட்டில்

பதினான்காம் நாளிலே ஆசரிக்கச் சொல்வாய்
பதியிலே என்றும் சிறந்தே -பதியிலே

இவ்விலக்கு மட்டும் தவிர நிறைமற்றோர்
அவ்வண்ணம் செய்யச்சொல் தேசத்தில் -இவ்வகை

செய்யாதோர் போவரே பாசுகா ஆசரிக்கா
செய்தனில் வீணாய் அறுந்துப்போய் -மெய்யாரே

வேறாள் மனைத்தங்கி ஆசரிக்க வேண்டுமெனில்
வேறாளும் பாசுகா செய்யட்டும் -வேறாளோ

நட்டாரோ வேறில்லை ஒன்றே நனிநீதி
நட்டார் செவிகேட்கச் சொல்
13

வனாந்தரத்தில் பயண விதம்

கூடாரம் கட்டிய நாளில் முகில்வந்து
கூடாரம் மூடியதைக் கண்டாரே -கூடாரம்

மேலே இரவிலே தீத்தோற்றம் கண்டாரே
மேலெழும் ஞாவரை தீயேதான் -மேலோரும்

கூடமுகில் மேலெழுந்தால் போவர் பயணித்து
கூடமுகில் மேலிருந்தால் தங்கினர் -நாடவர்

கூடமுகில் பார்த்தே பயணித்தார் என்றுமே
கூடமுகில் தீயும் நிலைத்திட -கூடம்மேல்

கூடமுகில் ஆண்டாக நாளாக வாரமாக
கூடம்மேல் நின்றிருந்தால் தங்குவர் -கூடத்தை

விட்டெழுந்தால் போவர் பயணமாய் விட்டவர்
நட்டாரும் செய்தார் சிறந்தங்கு -நட்டாரின்

விட்டுப் பயண விதமது மோசேயும்
திட்டநூல் தன்னில் எழுது
14

பூரிகைகள் செய்யச் சொல்லி அதற்கான பிரமாணத்தை தந்தார் கர்த்தர்

கர்த்தர் திருமகனார் மோசே யிடஞ்சொன்னார்
கர்த்தரென் சொல்கேள் அடித்திடுவாய் -கர்த்தரென்

மக்கட் சபைக்கூட்ட வெள்ளியால் பூரிகையீர்
எக்காளம் போலோசை செய்திட -தக்கார்

இரண்டுமே செய்திடு வெள்ளித் தகட்டால்
இரண்டும் பெருஞ்சத்தம் இட்டால் -இருவோசை

கேட்டங்கு மக்கள் வரச்சொல்வாய், ஒன்றெனில்
கேட்ட தலைவர்கள் வந்திட -கேட்க

பெருமோசை செய்திட்டால் கீழ்த்திசை மக்கள்
பெருமோசை தன்னைக்கேள் போக -பெரும்பயணம்

ஓசை இரண்டாம் முறைபெரிதாய் செய்திட
தீசைதென் பேர்பயணம் சென்றிட -மாசற்ற

ஆரோன் திருமகனார் மட்டும் பெருமோசை
சீராகச் செய்யச்சொல் அவ்வாறே -நேராக

செய்யச்சொல் இவ்வண்ணம் செய்வது அன்னாரின்
செய்வழி என்றென்றும் தானென -மெய்ச்சொல்

இனவெதிரி தன்னைப்போர் செய்யச்செல் மக்கள்
இனவெதிரி தன்னை அழிக்க -இனக்கர்த்தர்

என்முன்னே நான்நினைக்க தானே பெருவோசை
தன்னை முழக்கச்சொல் சீராக -அன்னார்சொல்

கேளார் அழித்தும்மை சீராய் விடுவிப்பேன்
கேளீர் இனமக்காள் பூரிகை -காளைபலி

தன்னில் விழாவில் நினைவாய் திருவோசை
நன்கர்த்தர் யானே உணர்
15

சீனாய் விட்டு இசுரவேலர் பிரயாணம் செல்லுதலும் மைத்துனன் ஓபாவை மோசே கூட வரச்சொல்லுதலும்

இரண்டாந் திருவாண் டிரண்டாந் திருமாத்
திரள்கூட மேல்முகி லேழ -திரள்மக்கள்

கீழ்திசையின் முக்குலத்தோர் முன்செல்ல ஆரோனின்
வேழ்மக்கள் கூடம் இறக்கிட -வேழ்மக்கள்

தென்திசை சென்றிட பின்னே திருப்பொருளை
நன்மக்கள் கோகாத் சுமந்திட -அன்னார்

இறைவிதியின் சொல்படியே சென்றார் இனத்தார்
இறைக்கூடம் தன்தோள்மேல் இட்டு -இறைமக்கள்

சென்றார் திருப்பயணம் பாரான் வனம்வர
நன்முகில் கூடமேற் தங்கிட -நன்மக்கள்

கூடவே நீயும்வா என்றான் திருமோசே
நாடனாம் மாமன் மகனிடம் -நாடானோ

என்னினம் என்தேசம் செல்வேன்நான் ஓபாசொல்
நன்றே யிதுவே உரைத்திட -என்னோடு

வாநீ வனத்தை அறிந்தோய் திருக்கண்ணாய்
வாநீ இனத்தோடு மோசேசொல் -மாநீதி

வந்தால் இனத்திற்கு தேவன் தரும்வளத்தில்
வந்தும்மின் மக்கள் வளப்படி -தந்திடுவோம்

எந்தனின் மைத்துனனே வாநீ திருகண்ணாய்
எந்நாளும் என்றான் திருவங்கு -அந்நாளில்

மூன்றுநாள் சென்றனர் மக்கள் திருப்பயணம்
மூன்றுநாள் மக்கள்முன் சென்றது -மூன்றாம்

திருநாள் பயணித்த மக்களும் ஆற
திருக்கூடம் மேல்முகில் நிற்க -திருவோர்

முகிலது மக்கள்மேல் நன்குடையாய் காத்து
முகிலது கூடம்மேல் நின்றால் -அகிலவனம்

தன்னிலே நிற்பர் திருமக்கள் அஃதேஆம்
நன்மக்கள் தங்கும் இடமாமே -என்னாளும்

கூடத்தின் சான்றுபெட்டி செல்லிரும்போ மோசேயும்
கூடம்முன் சொல்வான் திருக்கர்த்தா -கூடம்முன்

நீரெழும்பிச் செல்ல எதிரியோர் வேல்முறிந்தே
நீரும் திரும்பிடும் வீடு
16

பாரான் வனத்தில் மக்கள் முறையிடுதலும் அக்கினி அவர்களை அழித்தலும்

பாரான் வனத்திலே பாளையம் ஓய்ந்திருக்க
பாரதில் தன்மக்கள் ஓய்ந்திருக்கும் -சீரதைக்

காண வலம்வந்தான் மோசே இரவிலே
காணுலா பாளையஞ் சுற்றிட -காணவன

வானத்தில் விண்மீன்கள் மின்னிடவே நன்மக்கள்
மேனாடு செல்லும் வரையிலே -தேனதின்

நற்சுவை மன்னா புசித்தாரா என்கேட்க
நற்றானும் வந்தான் உலாவங்கு -நற்றார்

இசுரேல் இனத்தோடு சேர்வந்தால் நன்றே
திசைமக்கள் பல்லோர் திசையில் -திசைமக்கள்

கர்த்தரின் மேல்நம்பி வாராமல் காட்டிலே
வர்த்தக மில்லா தயர்ந்திட -கர்த்தராலே

வீடுவிட்டு வந்தோமே நன்றே நடக்குமென
வீடாமே பேரெகிப்து எஞ்ஞான்றும் -வீடதில்

யாமிருப்பின் ஊன்புசித்து நன்மகிழ்ச்சி யாகவே
யாமிருந்து செய்வோம் விருந்தேதான் -மாமன்றப்

பல்லோர்சொல் கேட்டிட்ட நல்லினத்தார் பையவே
பல்லோர்போல் ஆங்கே முறையிட -பல்லோர்போல்

சொல்லி முறையிட்ட சொல்லை இறைவனார்
பொல்லார்ச்சொல் கேட்டார் சினம்
17

அக்கினி எல்லா மக்களை அழிக்காத படி மோசே வேண்டுதல் செய்ததும் வாதை நின்றாலும் மக்கள் முறையிடுதலை விடாதிருத்தலும்.

எரிதழல் பாளையந் தன்னில் எரிந்தே
எரிசொல் சிலமக்கள் சாக -எரிதழலால்

சாகின்றோம் என்றே முறையிட, மோசேயும்
சாகா படிசெய்தான் வேண்டுதல் -சாக

எரிதழலால் சுட்ட இடத்தை தபேரா
எரிதழலூர் என்ற பெயர்ச்சொல் -எரியூர்க்கு

இட்டான் திருமோசே; மக்களோ மேன்மேலும்
தட்டினர் சொல்கேளார் அவ்விடமே -நட்டார்

எரிதழலால் மாண்டாரே சொல்கேளார், மக்கள்
எரிதழல்பின் சொல்கேட்பார் நம்ப -சரியோனும்

காண வலம்வந்தான் காலையில் பார்க்கவேஅ
காணுலா பாளையஞ் சுற்றிட -காணவனும்

யாரெரிந்தால் நாவறியா என்றிருந்த மக்களும்
யாரின்சொல் கேளாதே தத்தமது -சேரிடத்தில்

நின்றழுதார் ஊனுண்ண இல்லை கறியென
அன்னாரும் சேர்க்காண் குறையாக -இன்னாரும்

வீடாமே பேரெகிப்து எஞ்ஞான்றும் எங்களுக்கு
வீடதில் யாமிருப்பின் ஊன்புசிக்க -நாடதில்

வெள்ளரி கொம்மட்டி கீரையுள்ளிப் பூண்டதை
அள்ளிச் சமைப்போம் விருந்தென -எள்ளியோர்

காலையில் இங்கேயோ மன்னாவே கொத்துமல்லி
மாலைவரை ஒன்றே சமைத்திட்டு -காலைமாலை

என்றேயாம் எந்நாளும் வெவ்வேறு ஊனில்லா
வன்னிலை ஏனோ முறையிட -என்னேசொல்

எவ்வளவு தேவையோ முத்து நிறமன்னா
அவ்வளவு தந்தும் முறையிட -அவ்வாறே

மன்னா ஒலிவநெய் போலே சுவைத்தாலும்
மன்னா சமைத்தார் இடித்தவர் -மன்னாவை

தேனிட்ட நற்பணியா ரம்சொல்வர் மன்னாவை
தேனின் சுவைவெறுக்க மக்களோ -தேனினும்

இன்சுவை ஊனே எனமுறை செய்திட்டார்
அன்னாராம் மோசே யிடம்
18

மோசே கர்த்தரிடம் சென்று தன்னை இந்நிலையைக் காணாதபடி அழித்திடும் என்று இரைஞ்சுதலும் கர்த்தர் மூப்பரை நியமித்தலும், காடை பொழிதலும், இச்சித்த மக்களின் வாதையும்.

ஐயகோ என்செய்வேன் கர்த்தாவே ஐயகோ
ஐயா முலைப்பால் பருகுவோன் -ஐயனைப்போல்

ஐயா யெனைச்சுமந்துச் செல்சொன்னீர் பாருமே
ஐயகோ என்றார் சலித்திங்கு -ஐயாவே

இம்மக்கள் தம்மை கருத்தரித்து பெற்றேனோ
அம்மக்கள் சொல்லும் முறைகேட்க -அம்மாவோ

எம்மானே என்னால் சுமக்க முடியாதே
எம்மானே கேளீரோ சொல்லிதை -எம்மானே

உம்மிரக்கத் தாலே எனையீதைக் காணாதே
இம்மியும் இங்கே இலாதபடி -எம்மானே

என்னை கொலைசெய்யும், எப்படி நான்தருவேன்
என்னிடம் கேட்டவூனைத் தானேநான் -அன்னார்

சுமையென்று கண்டாயே மோசேநீ செய்வாய்
சுமைதீர் எழுபது மூப்பர் -சுமைபோட

கூடம்முன் வந்திடச்சொல், உன்மேல் அமராவி
நாடார்மேல் வந்திடச் செய்வேன்நான் -நாடார்முன்

மேலுஞ்சொல் மக்கள் செவிகேட்க ஊனுன்பீர்
காலைமாலை யல்ல ஒரிருநாள் -மேலாக

மாதம் முழுதும் இறைச்சி தனையுண்பீர்
வீதம் அழுங்குரலைக் கேட்டேனே; -வேதவரே,

ஆறு இலட்சம் இனத்தாரும் உண்ணவே
தாறுமாறாய் ஆமே அடித்தாலும் -ஆறாதே

மக்கள் பசியிங்கு, மாதம் முழுவதுமாய்
மக்கள் புசிக்கயேது ஊனிங்கு? -தக்கோனே

மோசேகேள் நல்லிறைவன் கைக்குறுகி உள்ளதோ?
மோசே இறைவனின் கைக்குறுகா -தீசையில்

மோசேநீ காண்பாயே ஊன்வருமோ வாராதோ
தீசைவனத் தின்நடு விங்குத்தான். -மோசேயும்

சொல்கேட்டு மோசே எழுபதுபேர் கூட்டினான்
நல்லோரைக் கூடம்முன் ஆங்கேதான், -நல்லோர்

அறுபத்தி எட்டே திருக்கூடம், நேரே
சிறுவர் இருவர் வராது -சிறுவரோ

மோசேயின் சீட்டில் இருவரிருந் தும்வாரா
மோசேசொல் கேட்டார் இறைவனார் -தீசைநில்

மூப்பர் அறுபத்தி எட்டுபேரும் வாக்குரைத்தார்
நாப்பிழறா ஆவியது மேல்வர -மூப்பரவர்

வாராதே விட்டவர் எல்தாத்தும் மேதாத்தும்
சேராதார் கூடம்முன் என்றாலும் -வாராத

மக்களும் பாளையத்துள் வாக்குரைத்தார் கேட்டங்கு
மக்களில் பிள்ளையறி வித்திடவும் -மக்களில்

வாலிபன் நூனின் திருமைந்தன் யோசுவா
வாலிபன்சொல் கேட்டு பகன்றானே -வாலிபன்சொல்

கேட்டீரே மோசேநீர் அம்மக்கள் வந்திட
கேட்காதார் செய்யும் தடையெனவே -கேட்டவன்,

வாலிபா நூனின் திருமைந்தா யோசுவா
வாலிபன்சொல் கேட்டேன். திருவாக்கு -மேலார்

அருளால் அனைவரும் வாக்குரைத்தால் நன்றே
இருளே உனது உரைதான் -அருளவர்

பாளையம் வந்திட்டார் எல்லாரும் சேர்ந்தங்கு
பாளையஞ் சுற்றிலும் காடைகாடை -பாளைத்தின்

னின்றிரு பக்கம் ஒருநாள் பயணமாய்
வன்காடை கொண்டது காற்றும்தான் -நன்றென

மக்கள் அகமகிழ்ந்து காடை சமைத்திட
மக்கள் அறிவிலியாய் ஊன்தன்னை -மக்கள்பல்

பட்டங்கு மெல்லும்முன் கர்த்தரின் வெஞ்சினம்
பட்டங்கு வீழ்ந்தார் குறைமக்கள் -பட்டவர்

பட்டங்கு வீழ்ந்ததால் கிப்ரோத்து அத்தாவா
இட்டனர் வீழிடம் பேராக -நட்டார்பின்

கிப்ரோத்து அத்தாவா விட்டு பயணித்தார்
தப்பியோர் ஆசரோத் திற்கு
19

மோசேக்கு விரோதமாக ஆரோன் மிரியாமின் கலகமும் மிரியாம் தொழுநோய் படுதலும்

நாடது எத்தியோப்பின் பெண்ணை மணமுடித்தான்
ஆடவன் மோசே வனதினிலே -நாடது

தன்னா டிலையென்றே சோதரர் பேசிட
நன்றில் பகன்றார் மருள்மக்கள் -அன்றோ

தகைநல் மரந்தன்னை புல்லினம் ஏசும்
வகைமூடர் மோசே தனியே -வகைந்திறை

வாக்கனோ ஆரோன் மிரியாம் எதிர்பேச
வாக்கவர் கேட்டார் சினந்தங்கு -வாக்கவர்

மூவரும் வாரும் திருக்கூடம் உள்ளேதான்
மூவரும் போயினர் ஆங்கேதான் -மூவர்காண்

கர்த்தர் முகிற்றூணின் மேலிறிங்கி வாயிலில்
கர்த்தர் இருவரோடு பேசிட -கர்த்தரும்

என்சொல்கேள் மின்லேவி தோன்றல் சகோதரரே
என்சொல் தனைக்கூற வாக்குரை -நன்றாரின்

நற்கனவில் பேசியே தோன்றுவேன் ஆயினும்
நற்றானோ இல்லை விதமிங்கு -நற்றான்

திருவில்லம் தன்னிலே வாய்மையுள் ளோனே
திருவாண் செவிகேட்க தன்னே -திருயான்

திருச்சொல்லை நேரே பகர்கின்றேன் கேளீர்
திருவாண் மறைச்சொல் இலைகேள் -திருவிறை

என்முகந் தன்னை இறைவாக்கன் நேராக
என்னாளும் காண்கின்றான், வன்னோரே -என்னடியான்

மேல்நீர் விரோதங் கொளச்செய்தே வன்சொல்லை
வேல்போல் எரிவதும் ஏன்சொல்மின் -கோல்மக்காள்

கர்த்தர் இறையனார் அச்சமது குன்றியே
கர்த்தர் இறைவாக்கன் மேலெரிந்தீர் -கர்த்தர்

சினங்கொண்டு போய்விட்டார் கூடத்தை விட்டே
சினத்தால் தொழுநோயா னாளே -வினையால்

உறைந்த பனிபோல் தொழுநோய் உழற்ற
உறைந்தவள் தன்னையே ஆரோன் -நிறைவிலா

போனோளைக் கண்டவன் மோசே யிடம்கெஞ்ச
போனவளின் பாவமெண்ணா தீரேசால் -போனவளே

ஐயகோ சோதரி போனாள் குறைப்பிள்ளை
ஐயகோ சோதரி பாவமென்னே -ஐயாநீர்

மன்னியும் என்றே கதறிட மோசேயும்
மன்னியும் என்றே இறைஞ்சிட -அன்னார்

தகப்பன் மகளைக் கடிதல் நலமே
தகப்பன் கடிந்தேன் மகளை -அகத்தை

விடுத்து புறம்பாக ஏழுநாள் வைத்து
தடையிலை சேர்க்க மகள்தான் -விடுத்தனர்

பாளை புறம்பே மிரியாம் அதுபடி
நாளை கழிக்க இனமக்கள் -நாளேழு

போகாமல் காத்தே தரித்திருந்தார்; பின்னரவர்
தோகையைச் சேர்த்துச்சென் றார்இனட்தார் -ஆகவே

ஆசரோத் தன்னை விடுத்து இனத்தாரும்
தேசம்செல் போனார், விரிபாரான் -தேசவனம்

தன்னில் அடைந்தே தரித்தனர் மக்களும்
நன்றாக மோசே தலை
20

மோசே தேசத்தை சுற்றிப்பார்க்க பன்னிரண்டு வேவுகாரர்களை அனுப்புதலும், அவர்களில் பத்துபேர் தேசத்தாரைக் கண்டு அஞ்சி இசுரவேல் மக்களை அச்சப்படுத்துதலும்

கண்டாலே நம்புவர் தன்மக்கள் என்றிறைவன்
கண்டுவர நீயனுப்பு தேசத்தை -கண்டுவர

மோசே பிரபுக்கள் நற்குலத்தின் நல்லோரை
தேசம் சரியோ எனக்காண -தேசத்தில்

நாற்பது நாட்கள் திரிந்துவிட்டு வாருமே
வேற்றேச மண்வளம் கண்டிங்கு -நாற்பதுநாள்

பின்நீர் வரும்போது கையில் சிலகனி
என்கண்காண் கொண்டுவா ரும்மென்றான் -நன்றாக

நற்றவரின் சொல்கேட்டு நற்பிரபுக் கள்சென்றார்
நற்றேசம் தானோ வெனக்காண -நற்றேசம்

தன்னில் வளங்கண்டுப் போனார் திகைத்தவரும்
தன்னுருவை கண்டார் இகழ்ந்தவர் -மென்னாண்

சிலகனி கொண்டுவா ரும்மென்றான் ஆக
அலரா கனிக்கொத்து கண்டார் -இலைவிட்

டறுத்தார் இருவர்கோல் கொண்டு சுமக்க
அறுத்தயிடம் ஏசுகோல் என்றார் -நறுமக்கள்

பன்னிரண்டு நற்பிரபு சென்றார், இருவரோ
நன்கர்த்தர் தேசம் தருவாரே -என்சொல்வேம்

பத்துப்பேர் தன்கண்ணில் கண்டார் இகழ்ச்சியாய்
அத்துனைப் பேர்செவி கேட்டிட -சொன்னார்

வளம்குறித்து ஓஓஓ மொத்தமாய் போவோம்
களத்தில் அழிந்தங்கு ஏனென் -கிளைஞரவர்

ஏவியர் பேராண் வியந்தோம்யாம் கண்டவரை
கூவினர் பத்துப்பேர் மக்களின் -ஏவல்

இருபிரபு காலேப்பும் யோசுவாவும் மட்டும்
திருவவர் நம்மோடே, ஏனாம் -மருளச்சம்

என்றே பகன்றிட்டார் மற்றோரோ தன்கண்ணில்
நன்வளங்கண் டும்விடாய்த்துப் போயினர் -மென்மக்கள்

தான்கெட்டு விட்டாதே ஊரைக் கெடுக்கவே
மேன்மக்கள் போலன்றி போனார்கள் -தான்கேட்ட

மக்களோ சென்றார் விடாய்த்து, மனக்குரங்கு
மக்களினுள் ஏறிக் குதித்து
21

மக்கள் மோசே ஆரோன் விரோதமாக பேசுதலும், யோசுவா காலேப் இடைமறித்தலும்

மனமது வீணாகப் போய்பிதற்ற வாயும்
இனமனிதர் கோவென் றழுதார் -வனத்தில்

இராமுழுதும் மக்கள் அழுதறற்றி வீணர்
திருவிருவர் நின்றார் எதிர்த்து -திருவோநீர்

ஆரோனே மோசேயே என்செய்தீர் என்றனர்
சீராமே மேலெகிப்து நாடுவிட்டு -வாராமல்

வேரூன்றி நின்றின் நலமாமே வீணாக
தேராதிப் பாலை மடிவோமே -பேரிடர்

போராலே யாம்மடிய தெய்வமும் கொண்டுவர
போராலே எம்பிள்ளை எம்இல்லச் -சீரவளும்

கொள்ளையாய் போகும் படியிறை கொண்டுவர
எள்ளளவும் நம்பா பிதற்றிட -கொள்ளாதே

போவோம்யாம் மேலெகிப்து நன்னாடு என்றவரும்
போவதற்கு நற்றலைவன் கொண்டேயாம் -கேவலமாய்

பேசினரே வேள்மேலே நம்பாத வீண்மக்கள்
பேசியதை கேட்டார் மருண்டவர் -பேசுசொல்

கேட்ட இருதிருவும் கைக்கூப்பி கேட்டனர்
கேட்டின் வழிபோகா வண்ணமே -கேட்டவிரு

ஒற்றரும் தம்முடுக்கை தான்கிழித்து தூயினரே
நற்ற திருநாடு தூயாமே -நற்றவர்சொல்

பாலுந் தெளிதேனு மோடுந் திருநாடு
வாலறி நல்லிறை நம்மோடு -சீலமாய்

அன்போ டிருந்தாலே கைக்கொடுப்பார் நன்னாடு
அன்பரே செய்யீர் முறுமுறுப்பு -வன்னவராம்

அந்நாட்டு பேரின மாந்தர் நினைத்தஞ்சீர்
அந்தோ நமக்கிரை யாவாரே -எந்நாளும்

நன்கர்த்தர் நம்மோடே தானிருக்க அந்நாட்டு
வன்னவரின் போச்சே நிழல்
22

மக்கள் யோசுவா காலேப்பை கல்லெறியத் துணிதலும் கர்த்தரின் மகிமை வெளிப்பட்டு சினத்தால் அழிப்பேன் எனச்சொல்லுதல்

ஈதென்ன வேதனையோ இவ்விருவர் பேசுகின்றார்
வேதனை சொல்லிடும் வீணரண்றோ -வேதனை

நீங்கிட கல்லெறிவோம் இவ்விருவர் மேலெனவும்
ஆங்கிறை கூடமேல் தோன்றிட -தீங்கிலா

நன்கர்த்தர் மோசே திருநோக்கி கேட்டாரே
என்சினத்தை எவ்வளவு தூண்டுவர்? -வன்மக்கள்

எம்செய்கை எல்லாமே கண்டபின்னும் ஏனோதான்
எம்மக்கள் நம்பா திருப்பாரோ -அம்மக்கள்

நோய்விட்டு வாதித்து நாட்டுள் வராதபடி
வாய்பேச்சால் கெட்டவரை நானழித்து -தூய்திருவே

உன்னைநான் பேராக்கி மேலான நல்லினமாய்
உன்விழுது செய்வேன்நான் நன்றாக - என்றவரின்

சொல்கேட் டதிர்ந்தான் திருமோசே, மக்களிவர்
சொல்பேச்சால் போனாரே கெட்டு
23

மோசேயின் இடை வேண்டுதலும் கர்த்தர் தண்டனையை குறைத்தலும்.

ஐயகோ ஆண்டவரே உம்மக்கள் வீணர்தாம்
கையாலே வன்னெகிப்து நாடுவிட்டு -வேயா

வனத்தினில் சேயழித்தார் என்றே எகிப்தின்
இனத்தாரும் கேட்டால் இகழ்ந்தே -அனைவரின்

வல்லிறைவன் மக்கள் நடுவே குடியிருக்க
நல்லிறைவன் எம்முன் முகமுகமாய்ச் -சொல்லும்

முகிற்றூண் பகலிலே காத்தெம்மை தீத்தூண்
வகையிரவில் கேட்டார் செவியில் -தகையார்

திரளாய் திருமக்கள் நின்றிருக்க இங்கு
திருவும் ஒருமனிதன் கொல்லும் -திருவகை

கேட்டாலே வேற்றினத்தோர் கீர்த்தி அறிந்துமவர்
கோட்டவரம் போகா தழித்தாரே -கேட்டால்

இரக்கம் அமைதியின் நல்லுருவே நாதா
திருமக்கள் வீணராய் செய்த -கரையில்

கறைபாவம் மன்னிப் பவரன்றோ? தந்தை
கறைமூன்றாம் நாற்றலை கேட்கும் -இறையவரே

அப்படியே வல்லமையாய் செய்திடும் நல்லவரே
இப்பழி பேசியோர் மன்னிப்பீர் -எப்படி

வீண்நாடு விட்டுவந்த நாள்முதல் மன்னித்தீர்
ஆண்டவரே செய்யும் வகையாக -ஆண்டார்

இறைவனார் சொன்னார்: இரங்குமெனக் கேட்டாய்
மறையோனே மன்னித்தேன் வீணர் -இறைவனென்

மேன்மகிமை அண்டமெலாம் நின்றிருக்கும் சொல்லிது
வான்கர்த்தர் எம்மாணை வாழ்வுபோல் -யான்செய்கை

கண்கண்டும் போனார் திருமக்கள் வீணாக
கண்கண்டார் மேன்மகிமை செய்தவை -மண்ணாரோ

பத்துமுறை சோதித்த வீணரெல்லாம் போகாரே
அத்தனை பேரும்நல் நாடுள்ளே -சித்தவன்

காலேப்போ நல்லாண் நிறையாவி கொண்டவன்
காலேப்பை நாடதில் சேர்செய்வேன் -வேலாணை

சீலமாய் பேரினமாய் பெற்றிடுவான் நாட்டதில்
காலேப்தன் காணி நிலந்தனை -பாலாறு

கானானின் கோனும் அமலேக்கு நாட்டாரும்
கானகத்தில் கீழே கருத்தோடு -கானகங்கா

அந்தபடி மக்களைக் கொண்டுசெல் செவ்வாழி
வந்தவழி போயிடு வீர்நீரும் -வந்தச்சொல்

எப்போதும் மீறுகின்ற இம்மக்கள் பாவத்தை
எப்போதும் யான்பொறுப்பே னோதிருவே -இப்போதே

சொல்வாய் இனத்தார் செவிகேட்க சொன்னவிதம்
சொல்படி செய்வேன் திருயானும் -சொல்படி

இவ்வனத்தில் சாவீர் இருபது மேல்பெரியோர்
அவ்வகையே; போவர் சிறுபிள்ளை -ஒவ்விய

நல்லார் இருவர் தவிர எவர்போகார்
ஒல்லார் உறையந்த நாடதில் -வல்லாரால்

கொள்ளையாய்ப் போவரென் நீர்சொன்ன பிள்ளைகள்
அள்ளவள்ள குன்றா வளநாட்டின் -உள்போவர்

வீணென விட்டெறிந்து பேசிய வீணரோ
வீணாகச் சாவீர் வனத்திலே -வீணாய்

வனத்தில் சடலம் விழுமட்டும் மக்கள்
வனத்திலே நாற்பது ஆண்டு -இனத்தாரின்

பாதகம் மேல்சுமப்பர் போனாரே வீணராய்
வேதவர் நல்லார் எதிர்த்துச்சொல் -பாதகர்

ஒற்றரவர் சுற்றிய நாற்பது நாளிற்கு
நற்றவர் மக்கள் ஒருநாளை -சுற்றுவர்

ஓராண்டாய் மக்கள் திரிந்திடுவர் மீறலால்
சேரச் சுமப்பர் விழுதுகள் -நேரில்லா

பத்துப்பேர் ஒற்றர் அனைவரும் ஆங்கேதான்
அத்துனை மக்கள் மனமடிய -மெத்தனச்

சொற்களால் செய்தவர் எல்லாம் திருமுன்னே
நற்றாரின் வாதையால் செத்திட -நற்றார்

இருதிரு யோசுவா காலேப் தவிர
கரைசென்ற பத்துபேர் சாக -அருவரின்

சொல்கேட்ட மக்கள் மனதுடைந்து போயினர்
சொல்கேளா உள்ளக் குரங்கு
24

மக்கள் கத்தர் சொல்மீறி மலை ஏற, அமலேக்கியர் கானானியரால் முறியடிக்கப் படுதல்

அதிகாலை முன்னெழுந்து மாக்கள் உரைத்தார்
அதிபதி நல்லிறைவன் நேரே -மதிகெட்டு

பாவம் புரிந்தோம், திருத்தேசம் போவோமே
ஏவியர்சேர் வாழ்நாடு என்றவர் -கேவி

உரைத்தவர் குன்றின்மேல் ஏறிடவும் ஆங்கே
திருமோசே கத்தினான் மக்காள்! -திருவவர்

கட்டளையை மீறி இனத்தாரேன் போகின்றீர்
கட்டாயம் வாய்க்காது நாடது -வெட்ட

அமலேக்கு கானான் பெருமைந்தர் காக்க,
இமைப்பொழுதில் நீர்மடிவீர் ஏறீர் -இமைப்பொழுதும்

நீங்கா இறைவனாரோ, உம்மோ டிரார்கேள்மின்
ஆங்கே விழுவீர்வல் வாளாலே -ஆங்கவர்

சொல்கேளா மக்களும் குன்றேறிப் போயிறங்க
சொல்படியே வன்னார் எதிர்வந்து -சொல்கேளா

மக்களை ஓர்மா வரைதுரத்த, மோசேயோ
தக்கவனாய் கூடம் அமர்ந்து
25

சேரும் தேசத்தில் காணிக்கை செலுத்தும் போது அந்நியனுக்கும் இனத்தானுக்கும் ஒரேவித நியமம்

திருமோசே நீயிசுரேல் மக்களிடம் சொல்வாய்
திருக்கானான் தேசஞ்சேர் பின்னர் - திருவுக்காய்

காணிக்கை தந்தால் மனமுவந்து சேர்த்தருவீர்
ஆணையிது ஆவொடுசேர் மாவதும் -காணிக்கை

காற்படி எண்ணெயிட்டு மாவதை கைப்பிசைந்து
காற்படி நல்ரசம் சேர்த்துநீர் -மேற்மேசேர்த்

தாரும்நற் காணிக்கை நேமம் இதுவேகாண்
சேரந்த நன்னிலத் தில்தானே -தாரும்

இருமடங்கு மாவிலே மூன்றில் இரண்டாய்
செருவெண்ணெய் கைப்பிசைந்து தாரும் -திருவிற்காய்

ஆட்டுக் கிடாயென் அதனோடு சேர்த்துரசம்
கூட்டியெரி மூன்றில் இரண்டாமே -நாட்டில்

எரிபலியாய் காளை செலுத்திட வந்தால்
எரிபலிசேர் பத்திலே மூன்றும்,- அரைப்படி

எண்ணெயோடு கைப்பிசைந்து கூட்டித் தருவீரே
எண்ணெயள வேரசமும் சேர்த்திட்டு -வண்ணம்

இனத்தான் அயலானென் வேறில்லை நேமம்
இனத்தார்செய் வண்ணம் அயலான் -மனதொடு

காணிக்கை தந்திடட்டும் நீதிபரர் கர்த்தர்முன்
காணிக்கை கைத்தர ஒன்றாமே -காணில்

திருக்கர்த்தர் பின்னும் திருமோசே கேளாய்:
திருக்கானான் தேசஞ்சேர் பின்னர் -திருவிளைச்சல்

காணிக்கை ஏறெடுப்பீர், போரடிக்கும் நஞ்செய்யில்
காணிக்கை போலே படைத்திடு -காணில்

களந்தரும் முன்முதல் நற்பயிரின் மாவில்
அளையதிர சந்தன்னை ஆட்டி -களந்தரும்

முன்முதல் நற்பயிரில் இங்ஙனமே செய்வீரே
என்றுமே காணிக்கை நன்றாமே -அன்றில்

அறியாமல் செய்தவறோ நேமம் பிழன்றோ
அறியா தவையார்வன் செய்தால் -அறியாத்

தவறுக்காய் காளை ரசமா யெரித்து
அவைபாவம் போக்கவே ஆடு -தவறாய்

அறியாமல் செய்த அவைபாவம் எல்லாம்
அறியாச்செய் மன்னிப்பார் தேவன் -அறியாச்செய்

அந்நியனோ தன்னினமோ எல்லாம் சமமாமே
எந்நாளும் கர்த்தரின் முன்னரே -அந்தபடி

நன்கர்த்தர் நேமம் துணிகரமாய் மீறினால்
நன்கர்த்தர் தன்னையே நிந்திக்கும் -வன்னோனே

நன்கர்த்தர் சொல்மீறல் ஆதலால் போவரே
தன்னினம் விட்டு அறுந்து
26

ஓய்வு நாளை கடைப்பிடிக்காதவனுக்கு தந்த தண்டனை, மற்றும் இனத்தாருக்கு கற்பனைகளை நினைவூட்ட தொங்கல்கள் அணியச் சொல்லுதல்.

வனத்தில் இருக்கையில் ஓராள் திருநாள்
மனதில் இருந்தாமல் சுள்ளி -வனத்தில்

பொறுக்க; இசுரே லியர்சேர்ந்து அந்த
சிறுவாள் பிடித்து கொணர -சிறுவனாம்

மோசே அறியானே என்செய்ய என்பதினால்
தேசத்தார் சேர்பாளை காத்திட -மோசே

திருக்கர்த்தர் முன்கேட்டான் என்செய்வேன் சொல்லும்
திருநாளைக் கைக்கொள்ளான் வன்செய் -திருவாம்

திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார்: மாந்தன்
திருநாளைக் கைக்கொள்ளா பாவம் -திருவெதிர்

கொல்வீர் அவையாரே பாளை புறம்பிட்டு
கல்லெறிவீர் என்றாரே தீர்ப்பங்கு -அல்லோன்

திருக்கர்த்தர் மோசேக்குக் கட்டளை யிட்டார்
வரைபாளை விட்டுப் புறம்பே -சரியற்றான்

கல்லெறிந்தார் மக்கள்; தவறிழைத்தோன் போனானே
கல்பட்டு ஆங்கே மடிந்திட -வல்லானே

மோசே இசுரேல் இனத்தார் இடம்பேசு
மாசற்று நேமம் கடைப்பிடிக்க -தேசத்தார்

ஆடையோரம் தொங்கல் இளநீல வண்ணத்தில்
ஆடைகாண் போது நினைந்து
27

கோராகு தாத்தான் அபிராம் கலகம் செய்தலும் பூமி அவர்களை விழுங்கிப்போடுதலும்.

லேவி வழிவந்த கோகாத் பெயரனாம்
லேவியன் இத்செயார் பெற்றவன் -லேவியன்

கோராகு, ரூபன் வழிஎலியாப் பெற்றவர்
தேராதார் மூவர் இணைந்தங்கு -தேரார்

சிறகுள்ள தென்றால் கரப்பான் கழுகோ
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் -சிறப்பிலார்

சாகாத வண்ணம் திருமோசே வேண்டுதலை
ஈகை அறியார் பிதற்றிட -சாகவே

சங்கத்தார் சீரார் இருநூற்று ஐம்பது
அங்கவர் கூட்டி எழும்பியே: -பங்கம்

உரைக்காதீர் மோசே திருஆரோன் நீவிர்
வரையிலை மக்களார் தூயர் -உரையவர்

கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறார்
கர்த்தரவர் தூயர் அறிவோமே -கர்த்தரின்

நல்லவை மேலாக ஏற்றுவதேன் உம்மைநீர்
நல்லா ரதைக்கேள் அதிர்ந்தனர் -நல்லாண்

திருமோசே கூனிக் குறுகி விழுந்தான்
திருமுன்னே நாளை வருவீர் -திருச்செய்வார்

யார்தன்முன் ஊழியர் தேர்வதை, அவ்வாளே
பார்தனில் தூயர், உரைத்தவன் -நேர்கேள்மின்

கோராகே, கோராகின் கூட்டமே கொண்டுவாரும்
சீரவர் நாறுபுகை ஏந்திட -நேரவர்

கூடம்முன், லேவி வழிவந்தோர் காண்பேசின்
நாடவர் என்பே சுவரேஎன் -ஆடவர்

லேவி வழிவந்தோர் தம்மை தமக்கென
மேவியே தூயென்றே கர்த்தரும் -தேவனின்

கூடவேலை செய்யழைக்க உம்மை பிரித்தாரே
கூடவே ஆசரியர் ஆகவேண்டு? -ஆடவரே

ஆரோன் எதிராக பேசவில்லை கூட்டாதார்
நேராண் நிறையிலன் பாத்திரனோ -நேரார்

எதிராகச் செய்தீர் கலகம்; இருவர்
எதிர்வாரும் என்றான் திருவும் -அதட்டி

வரச்சொல்ல நீயென்ன ஆளரசோ மாட்டோம்
வரவைத்தாய் நல்தேசம் விட்டு -கரைசேர்ப்பேன்

என்றே இலாததைச் சொன்னாய், இலைவேண்டாம்
நன்றில்லை உன்செயல் தானிங்கு -தன்னே

வரமாட்டோம் அம்மகனார் கண்கள் பிடுங்க
திருவென்று நீநினைத்தாய் போவாய் -தரமான

காணிநிலம் தந்தாயோ வீணாய் அழைப்பதேன்
வீணர் உரைத்தார் பிழன்றங்கு -காணச்

சினங்கொண்டான் மோசே செவிவழிச் சொல்கேள்
சினத்தால் இறைவன்முன் சென்றே -இனத்தாரின்

காணிக்கை ஏற்கா திரும்திருவே; சீரறிவீர்
காணிக்கை வாங்கிலன் யானிங்கு -வீணனே

கோராகே வந்திடு நாளை திருமுன்னே
நேரவன் ஆரோன் வருவானே -தேரவே

நாறுபுகை ஏந்திவாரும் எல்லோர் தனித்தனி
வேறிரு நூற்றைம் பதாய்க்கோலச் -சேறாரும்

சொல்படி வந்தார் இருநூறும் ஐம்பதுமாய்
சொல்படி வெவ்வேறு கையேந்தி -நல்லார்முன்

கோராகோ மக்களை ஏவி திருமுன்னர்
சீரற்றே கூடிவரச் செய்தனர் -நேரவர்

கர்த்தரின் சீர்மகிமை அப்போ தவைக்காண
கர்த்தர்: திருமோசே ஆரோனே -கர்த்தரென்சொல்

நீரவை விட்டுப் பிரிந்திடுவீர்; சொல்கேளார்
சீரற்றோர் தம்மையழிப் பேன்யானே -நேரே

முகங்கவிழ்ந்து மன்றாட்டு செய்தார் திருமுன்
அகமுள்ளோர் யாவர்க்கும் தேவா -மிகையன்றோ

சீரற் றொருவன் பிழைக்காய் அவையழித்தல்
நேரார் சினங்கொள்வீ ரோயிறையே? -நேரார்

திருச்சொன்னார் கோராகு தாத்தான் அபிராம்
இருமிடம் விட்டு விலக்கு -திருவோர்;

இருமிடம் போக அவையாரும் பின்செல்
இருமிடம் யாவர் அடைய -திருவெதிர்த்தத்

தீயோர் செயலின் கொடும்பாவத் தாலேநீர்
தீயோராய் எண்ணா படியேபோம் -தீயோரின்

வீடுவிட்டு போம்விலகி கையுந் தொடாதீரே!
வீடுவிட்டு போயினர் ஆங்குத்தான் -வீடுமுன்

மூவர், மனைவி, வழிவந்தோர் நின்றனர்
மேவியான் தன்மனம்போல் செய்ததிலை -கோவின்

செயலே புரிந்தேன் எனநீர் அறிய
இயற்சாவு வாரா திவர்க்கு -செயலாம்

புதிதே இதுகாண்பீர் நேரார் செயலே
அதினால் அறிவீர் மகிமை -வதையாய்

புவியும் பிளந்து இவர்போவார் சேர்ந்தே
அவையாரின் கண்முன் மடிந்து -இவர்கள்

திருவை அவமதித்தார் என்றறிவீர் அப்போ
இருமிடம் சேர்ந்தே விழுந்தார் -திருச்சொல்லை

மீறிய வன்மக்கள்; கண்ட இனத்தாரோ
சீறினோம் போவோம் மடிந்திங்கு? -சீற்றார்

இருநூறும் ஐம்பதும் பேராய் புகைக்செய்
திருமுன்னே வந்தவரை தீயும் -இரையாக்க,

சேர்மனிதர் கொண்டுவந்த நாறுகோல் தீப்பட
நேர்மக்கள் தூயெனச் சொல்லிடு -நேரே

இனத்தார்முன் காண அடையாளம் அஃது;
இனம்பார்க்க பீடத்தின் மேலே -கனமாய்

தகடாய் அடித்தவற்றை மூடச்சொல் பீடம்;
தகவிலார் மீறுதலுக் காகத் -தகப்பொன்

எலியேசர் செய்தான் திருமோசே சொல்லால்
எலியேசர் கோல்கள் அடித்து -பலிபீடம்

மேலே தகடாக மூடினான் ஆரோனின்
ஆலம் விழுதே மகன்
28

மக்கள் அடுத்த நாளில் மோசேவிற்கு எதிராய் கோராகை சாகடித்தது ஏன் எனக்கேட்டலும் கர்த்தரின் வாதையும்.

பதரே பதரே மகிமை அறியார்
பதரவர் சென்றே முறையில் -பதராய்

இதைப்போலச் செய்தீர் திருவினத்தார் நெல்லே
அதைக்கேட்க கூடம்முன் வந்து -அதனால்

திருமோசே ஆரோன் திருக்கூடம் முன்னர்
திருவிற் கெதிராய் தரமில் -அரைவெந்த

மக்கள் பதரை திருநெல்லாய் பேசிட்ட
மக்கள் அதமாவர் இன்றவர் -தக்கார்

முகங்கவிழ்ந்து மன்றாட்டு செய்தார் திருமுன்
அகங்காணும் கர்த்தரின் வாதை -இகத்தில்

தொடங்கிட, ஆரோனே சென்றுநீ தீக்கை
அடங்கிட காட்டு புகையே -அடங்க

திருமோசே சொல்படி போனான் திருவும்
திருவெதிர் பேசியவர் சாக -வரையில்

புகையிட வாதையும் நின்றிட அந்தோ
மிகையாமே செத்தார் கணக்கு -தகவிலான்

கோராகின் மீறல் இருநூறும் ஐம்பதும்
கோராகை நெல்லெனச் சொன்னோரால் -தேராதார்

போனாரே ஈரேழு ஆயிரமும் ஏழுநூறும்
ஆனாரே வாதை மடிந்து
29

இனத்தலைவர் பெயர்எழுதி சமூகத்தில் வைத்த பன்னிரண்டு கோல்களில் ஆரோனின் கோல் துளிர்த்தலும் மக்கள் அழிந்துபோகிறோம் என கூறுதலும்.

இனத்தலைவர் எல்லா ரிடமுஞ்சொல் வாரீர்
இனத்தலைவர் கோல்கொண்டு, கோல்மேல் -இனத்தலைவன்

பேரெழுது, பன்னிரண்டு கோல்கள் இனத்திலக்கம்
பேரது லேவிஆ ரோன்கோலை -சீராக

இவ்வகை பன்னிரண்டு கோல்கொண்டு வாசமூகம்
அவ்வகை நானிங்குத் தேர்ந்தவன் -அவ்வாறாய்

காண்பிப்பேன் வைத்திட்ட கோலது தானாக
காண்விடுமே பச்சைத் துளிர்த்திடும் -காண்பார்கள்

இம்மக்கள் உம்மேல் இனிமேல் முறுக்காமல்
தம்கர்த்தர் தேர்ந்தோன் அறிந்திட -அம்மானே

கொண்டுவரச் சொல்லிடு பன்னிரண்டு கோல்களை
கொண்டுவரச் சொன்னான் திருவங்கு -கொண்டுவந்து

பன்னிரண்டு கோல்களை தூய்சமூகம் முன்னராய்
தன்கையால் மோசேயின் கைத்தந்தார் -வன்மக்கள்

கண்பார்க்க வைத்திட்டான்; காலையில் போய்பார்த்தால்
கண்துளிர் ஆரோனின் கோல்தானே -மண்ணிலாது

அக்கோல் இலைவிட்டுப் பூப்பூத்து நின்றதே
தக்கான்கோல் வாதுமை நற்கனியும் -அக்கோலில்

காய்த்திருக்க மற்றெல்லார் கோலோ வெறுங்கோலாய்
காய்ந்திருக்கக் கண்டார் இனமக்கள் -தூய்முன்

அவரவர் கோலை அவரவர் வாங்க
தவனவன் கோலைநீ வைப்பாய் -தவக்கூடம்

தன்னிலே, இவ்வகை நீசெய்யின் மக்களும்
வன்சொல்லா தேயிருப்பர் கோள்தானே -அன்றியும்

வேள்சொன்னார் மோசே துளிர்க்கோலை நீவைத்தால்
கோள்சொல்லா தேயிருப்பர் மக்களார் -தேள்சொல்

இனமக்கள் சொல்லாரே மோசேயும் நாளில்
இனிதே இறைக்கீழ் படிந்து -இனிதறியா

மக்களோ அச்சத்தால் மோசே யிடம்சொன்னார்
மக்கள்யாம் சாகின்றோம் இங்குத்தான் -தக்கார்

இறைவனின் சான்றிடம் செல்லும் எவரும்
கறையால் மரிக்கின்றோம் யாமே -இறைக்கூடம்

அஞ்சுகிறோம் மோசே, திருமுன்னர் யாம்வர
எஞ்சி எவரும் இலைநிலை -துஞ்சி

வரும்வரை நில்லாதோ என்றே இறைவன்
அருள்புரியார் பேச்சு பிதற்று
30

ஆசரிய ஊழியத்தையும் கூடாரத்தின் ஊழியத்தின் பொறுப்பும் ஆரோன் மற்றும் ஆரோன் வழிவந்தோருக்கு கர்த்தர் பொறுப்பாக்குதலும் லேவியரை கூடத்தின் மற்ற பணிவிடைக்கு தத்தமாக தருதலும்.

ஆரோ னிடம்தேவன் சொன்னார் திருமக்கள்
சேர படைக்கும்நற் காணிக்கை -தேரவன்

உந்தன் திருமக்கள் எல்லாரும் உண்கவே
இந்நியமம் என்றும் சிறப்பென்று -அந்நாளில்

ஆரோ னிடம்தேவன் சொன்னார் திருலேவி
சேரலாம் கூடம் அருகேதான் -சேராரே

வேறெவரும் சாகாத வண்ணமாய்; லேவியும்
நாறுபுகை செய்யலா காதென்றும் -கூறினார்

கூடார வேலை சரிவரச் செய்தலோ
கூடத்தி நுள்ளே நுழையுமவ் -வேடமணி

ஆசரியன் உன்மேலும் உன்வழி மேலுமே
நாசமாகா வண்ணம்நீ செய்திடு -ஆசரியன்

ஆசரிய ஊழியம் செய்சரியாய் உன்வழியும்
ஆசரியர் தானே, சரிவர -ஆசரிய

ஊழியம் செய்தலோ உன்மேலும் உன்வழிமேல்
ஊழியப் பேராம் பொறுப்பாமே -ஊழியர்

கூடப் பணிவிடை காவலுக்கு லேவியர்
கூடம் வெளிநின்று செய்யலாம் -நாடார்

எவரும் அருகிலே வாராத வண்ணம்
அவர்கள் பணிசெய்யச் சொல்வாய் -தவனே

இசுரேல் இனமேற் சினம்வாரா வண்ணம்
திசைதனில் கூடத்தை காப்பீர் -இசுரேல்

மனிதரினின் றேயானும் லேவி இனத்தை
நனிதாய் கொடுத்தேனே தத்து
31

லேவியருக்கு நாட்டவர் தரும் தசமபாகம் மற்றும் லேவியர் ஆரோன் குமாரருக்கு தரும் தசமபாகம்.

நாடார் கொடும்நற் கனிகள் விலங்குகள்
கூடம் நறுபணி செய்யுந்தன் -வேடர்

திருமக்கள் சொந்தமே; நாடாரின் பத்தோர்
திருப்பங்கு லேவியின் பங்கு -திருலேவி

பத்தோர் திருப்பங்கில் பத்தோர் எடுப்பித்து
அத்தனை பங்கிலும் கர்த்தருக்காய் -நித்தம்

தரச்சொல்வாய் லேவி மனிதரிடம் நல்ல
தரமான பத்திலோர் பங்கு -திருலேவி

இவ்வகை காணிக்கை நெல்வயல் காணிக்கை
எவ்வகையோ அவ்வகையே ஏற்பேன்யான் -அவ்வகை

காணிக்கை ஆரோன் திருப்புதல்வர் பங்காமே
காணி நிலமில்லை யாங்கேதான் -பேணுவோர்

ஊதியம் ஆரோன் திருப்புதல்வர் தன்னிற்கு
ஆதலால் லேவியர் பத்திலோர் -வீதமே

நல்லூதி யம்காண் நிறைதேசத் தில்தானே
நல்லாரும் மோசேக்குச் சொல்
32

இறந்தவரால் வரும் தீட்டு குறித்த நியமம்

நேமம் இதுவே திருவிருவர் தான்நோக்கி
நேமச் சடங்குகள் சொன்னாரே -நேமமாய்

நற்கிடாரி எல்யேசன் கைத்தந்து வெட்டலில்
நற்கிடாரி கொல்லச்சொல் ஆங்குத்தான் -நற்றான்

கிடாரியின் நல்லுதிரம் கையால் தெளிச்சொல்
இடைத்தரம் எல்யேசன் ஏழு -கிடாரி

நிறஞ்செம்மை ஊன்பழுது இல்லா நுகங்கீழ்
அறவே படாததம் மாடு -சிறந்தங்குக்

கொன்ற கிடாரி முழுதெரித்து முப்பொருள்
வன்தீயில் எல்யேசன் போடச்சொல் -உன்மகன்

அன்றவன் ஆடை வெளுத்து குளித்தபின்
நின்றிடுவான் மாலைவரை தீட்டாமே -அன்றியும்

கொன்றோன் கொளுத்து மவனுஞ்சேர் தீட்டாமே
அன்றவர் ஆடை வெளுத்தபின் -நன்றாய்

குளித்திட, தீட்டாக மாலைவரை நிற்பர்
அளிசேர்த்த தூயோனும் தீட்டாம் -அளிசேர்த்து

மன்றம் வெளியே கிடாரியின் சாம்பல்வை;
அன்றள்ளிப் போட்டோனும் தீட்டாமே -மன்றவர்

நட்டாரும் ஆடை வெளுத்திட்டு எல்போக
நட்டார் இருப்பரே தீட்டாமே -நட்டாரில்

கூடமுள் யாரும் இறந்தாலே கூடமுள்
மூடா தெதுவுமே தீட்டாகும் -கூடமுள்

வந்தோர் சவந்தொட்டோர் தீட்டாமே ஏழுநாள்
வந்தோர்மேல் நீறுநீர் ஊற்றெடுத்து -அந்நீரை

மூன்றா வதுநாளும் ஏழா வதுநாளும்
மேன்மை யுறவே தெளித்திட -வான்கீழே

மூன்றிலும் ஏழிலும் நன்னீர் தெளிபடா
தோன்றியோர் சுத்தமாகார் கேளீரோ -வான்கீழே

வந்து வசிக்கும் இறையிடத்தை தீட்டாக்கும்
பிந்தையோர் போவரறுப் புண்டெனவே -வந்தவர்

ஏழில் தெளிபட்டு ஆடை வெளுத்திட
ஏழாம்நாள் எல்போம் அளவிற்கு -வேழில்

கடையாய் இருப்பரே தீட்டாகி நின்றோர்
கடையர்தூ யாகா தவரே -நடப்பவரோ

மூன்றில் நனியேழில் நன்னீறு நீர்தெளித்தோர்
மேன்மை திருச்செயல் என்றாலும் -வான்கீழ்

இராமட்டும் தீட்டாகி நிற்பர்கேள்; தீட்டோர்
கரந்தொட்ட யாவையுந் தீட்டாம் -இருப்பானே

தீட்டை கரந்தொட்ட மாந்தரும் -தீட்டாம்
இராமட்டும் நிற்பர்; நியமம் பகன்றார்

இருவர் செவிகேட்க நன்று
33

மேரிபாவின் கன்மலையினின்று நீர்வருதல், ஆரோன் மோசே இருவரின் கீழ்படியாமையால் கானானிற்கு செல்லமாட்டார் என கர்த்தர் சொல்லுதல்.

வனமுள் மிரியாம் மரிக்க அடக்கம்
வனத்தில் புரிந்திட்டார் மாந்தர் - வனத்தில்

குடிக்கவும் நீரில்லை சீனில்; அவரை
குடிநீர் தருவீரே இங்கு -குடிமக்கள்

ஐயகோ அத்திப் பழமிலை மாதளம்
ஐயகோ இல்லையே நீரிலை - ஐயகோ

சாறிலை, ஊணிலை யாமுந்தான் செத்திருந்தால்
வேறோய் நலமாம் புலம்பிட -வேறாய்

திருவிருவர் சென்றாரே கூடம்முள் கேட்டு
திருமுன் விழவும் திருவின் -திருமாண்பு

சீரிருவர் கண்டனர் ஆங்கேதான், கர்த்தரும்
சீரவர் பேசினார் ஆங்குத்தான் -நேராகச்

சீரவர் மோசேயை நோக்கி: திருக்கோலைச்
சீரிருவர் கொண்டு சபைகூட்டி -நேரேச்செல்

கண்களுக்கு முன்னே மலையிடம் பேசிட
கண்காண நீரும் வருமங்கே -கண்காணக்

கோலெடுத்து போனார் திருவிருவர் கன்மலைக்கு
கோலெடுத்த மாண்பன் சினங்கொண்டோ -தாலந்து

உண்டெனக்கு என்றே நினைத்தானோ, நல்லினத்தார்
அண்டக் கலக இனத்தாரே -மண்ணின்

இனத்தார் இடம்சொல் கலகப் பிரிவோர்
இனத்தார் இதுகேள்மின் யாமோ -இனங்காணக்

கன்மலையி னின்று வருவிப்போ மோநீரை
கன்மலையை தட்டினான் கோனவன் -வன்னாய்

இருமுறை தட்டியதும் நீர்மிகுதி ஓட
திருமக்கள் நீர்குடித்து மாக்கள் -வரும்நீர்

குடித்திட அம்மலை மேரிபா; வாதம்
குடிநீருக் காய்ச்செய் ததாலே -குடித்திட்ட

பின்னர் திருக்கர்த்தர் சொன்னார் திருவிருவே
கன்மலையில் எம்மைநீர் தூயாக்கா -என்மேலே

நம்பிக்கை வையாத இக்குறைவால் செல்லீரே
நம்பி யிருந்ததந் நாடு
34

காதேசில் இருந்து ஏதோமுக்கு தூதுவிடுதலும் ஏதோம் வழிமறுத்தலும்

காதேசு சேர்ந்து சிலதூதர் விட்டானே
காதேசு சேர்ந்தோம் வருகிறோம் -வேதவர்

நற்றூதன் கொண்டனுப்பி எம்மைதான் ஏதோமே
நற்கர்த்தர் கொண்டுவந்தார் இங்குத்தான் -நற்றாணே

ஏதோமே ஏதோமே உன்தமன் கேட்கின்றான்
ஏதோமே உன்நாட்டின் சீர்வழியில் -ஏதோமே

செல்வோம்யாம்; ஏதும்வேண் டாம்யெமக்கு செல்வழி
சொல்வாய் தமனுக்கு நீருந்தான் -சொல்லதை

ஏதோமோ கேட்டு வழிசெல்லக் கூடாது
வேதனை யாமறியோம் போம்வழி -வேதனை

செய்வேன் வழிவந்தால் என்றே இனத்தூதர்
செய்வதைச் சொன்னான் தமனும்தான் -செய்கேட்டு

ஏதோமே ஏதோமே உன்தமன் கேட்கின்றான்
ஏதோமே உன்நாட்டின் சீர்வழியில் -ஏதோமே

செல்வோம்யாம்; நீருக்கும் காசுதந்து போவோமே
செல்வழி தாருமே நீயுந்தான் -சொல்லதை

ஏதோமோ கேட்டு வழிசெல்லக் கூடாது
வேதனை யாமறியோம் போம்வழி -வேதனை

செய்வேன் வழிவந்தால் என்றே இனத்தூதர்
செய்ய மறித்தான் வழிதனை -செய்வந்த

ஏதோமின் சொல்கேட்டு அங்கேதான் விக்கித்து
ஏதோம் தமர்நிற்க பின்சென்றார் -ஏதோமின்

எல்லையாம் காதேசை விட்டுப்போய் ஓர்மலை
நல்லாரும் சென்றார் நடந்து
35

ஓர்மலையில் ஆரோன் மரித்தலும் மக்கள் துக்கம் கொண்டாடுதலும்

ஓர்மலையில் மோசே யிடஞ்சொன்னார் கர்த்தரும்
மேர்பாவில் நீரிருவர் வாக்குக்கு -சீர்கேளா

அக்குறையால் போகீரே சீர்நாடுள் என்றேனே
தக்காராய் போனீர் தமரிருவர் -தக்கபடி

ஓர்மலைமேல் கொண்டுவா ஆரோன் மகனுடன்
சீர்ஆரோன் ஆங்கேதான் சீவிப்பான் -சீர்மகன்

எல்யேசன் நற்றாடை போடுவாய் ஓர்மலைமேல்
நல்லாணும் செய்தனன் கேட்டங்கு -நல்லாண்

மலைமேலே ஆரோன் மரித்திட வந்தார்
மலைவிட்டு நல்லிருவர் தாமே -மலைவிட்டு

வந்திருவர் கண்டு இனத்தாரும் ஆரோன்பால்
சிந்தைக்காய் துக்கித் தனராங்கு -அந்தபடி

துக்கித்த முப்பது நாட்களாம் சிந்தைக்காய்
துக்கித்தோர் கண்ணீர் சொரிந்திட -துக்கித்த

மக்களுக்கு ஆறுதற் சொற்களும் இல்லையே
மக்க ளழுது புலம்பு
36

ஆராத் அரசனின் நாட்டை அழித்து ஓர்மா என பெயரிடுதல்.

வழிகாட்டு வேவுகாரர் காட்டும் வழியே
வழிசென்றார் மக்களு மன்றே -வழிவரும்

மக்களை கானானின் வேந்தனாம் ஆராத்து
மக்களோடு வந்தான் எதிர்த்துவர -மக்களில்

தென்திசை வேந்தன் சிலரைச் சிறைபிடிக்க
அன்றே இசுரேல் இனத்தாரும் -அன்னார்

திருக்கர்த்தர் இம்மக்கள் கைக்கொடுமே தந்தால்
திருச்சொற் படியழிப்போம் யாமே -திருவாம்

திருக்கர்த்தர் மக்கட்சொல் கேட்டார் செவிசாய்த்
தருவேன் அழிப்பீர் இனத்தார் -திருச்சொல்

படியழித்து ஓர்மா பெயரிட்டார் அவ்வூர்
அடித்தொழித்த காரணத்தால் தானே -அடித்தொழித்தப்

பின்னர் இணம்பய ணித்து
37

இசுரேலர் முறுமுறுப்பால் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கர்த்தர் தண்டித்தலும், மோசேயின் வேண்டுதலும்

ஏதோமைச் சுற்றிப்போம் ஓர்மலை விட்டவர்
வேதன் பிளந்தக் கடல்வழி -வாதை

வரவும் வழிநிமித்தம் மக்கள் மனம்போய்
திருவெதிர் பேசினரே கேள்மின் -திருவினம்

மோசேக்கும் கர்த்தருக்கும் வீணெதிர் பேச்சாக
ஆசைப் படுநற்றூன் இல்லைக்காண் -வீசை

எடுத்தாலும் வான்மன்னா எவ்வளவாய் உண்போம்
கெடுத்தீர் வனவழி இட்டு -நடுக்காட்டில்

நீரில்லை அப்பமில்லை என்றே புலம்பலால்
சீரற்றோர் மேல்வர தீப்பாம்பு -சீரவர்

ஏவிவிட மாய்ந்தனர் பன்மக்கள் தீவனத்தில்
தேவனும் கொண்டார் சினம்தானே -சாவிலே

ஐயகோ ஐயகோ மோசேநீர் பாரீரோ
ஐயகோ தீவாய் அரவங்கள் - ஐயகோ

மக்கள்யாம் பாவஞ்செய் தோமே திருவெதிர்
மக்களுக்காய் வேண்டும் திருவிடம் -மக்களுக்காய்

மோசேயும் விண்ணப்பம் செய்திட, கர்த்தரும்
மோசேநீ ஏற்றிடு கம்பின்மேல் -தேசத்தார்

காணத்தீப் பாம்பின் உருவம்; கடிபட்டோன்
காணப் பிழைப்பான் விடமின்றி -காணவே

மோசேயும் வெண்கல பாம்பொன்றை செய்வித்து
தேசத்தார் காணவே மேலேற்ற -தேசத்தார்

பாம்பின் கடிபட்டால் நோக்க விடமுறிந்து
தேம்பா தினத்தார் பிழைத்து
38

மக்களின் பயணம் மற்றும் அவர்களின் பாட்டு

மக்கள் வழிசென்று ஓபோத்தில் தங்கினர்
மக்கள் வழிசென்று சாரேத்போத் -தக்கதாய்

மக்கள் கிழக்கே வழிச்சென்று மோவாப்பில்;
மக்களும் சாரேத்தைச் சேர்ந்திட -மக்கள்

வழிசென்று அர்னோன் நதிசேர்ந்து தங்கி
வழிசென்று பேயேர் இடம்போய் -வழிமுன்னே

மக்களை கூடிவரச் செய்நீர் தருவேனென்
தக்கார் பகன்ற இடமது -பக்கமாய்

வந்த இனமக்கள் பாட்டெழுதி பாடினர்
வந்திடு தண்ணீரே பொங்கிடு -வந்திட்ட

நீர்க்குறித்து பாடுவோம் வாரீரோ, வந்ததே
சீர்ச்சொல்கேள் கோலாலே தோண்டினார் -சீர்மக்கள்

மீண்டும் பயணித்துச் சென்று
39

இசுரேலர் சீகோன் மற்றும் ஓக் மன்னர்களை வீழ்த்துதல்

மக்களும் மாத்தனா சென்று நகாலியேல்
மக்கள் நடந்துவர பாமோத்து -தக்கார்

வழிசேர் எசிமோனை நோக்கும் பிசுகா
செழிமருச்சேர்ந் தாரே இனத்தார் -வழிசெல்

செழிமருச்சேர் மக்கள் எமோரிய வேந்தே
செழிமருச்சேர்ந் தோம்யாமே சீகோன் -வழிசெல்வோம்

வேந்துவழி நீர்ப்பழம் கைத்தொடோம் சொன்னார்கள்
வேந்தனோ வந்தான் எதிர்த்தங்கு -மாந்தர்

இசுரேலர் சீகோன் முறியடித்து வாழ்ந்தார்
இசுரேலர் அம்மோன் வரைவாழ் - இசுரேலர்

பாட்டு, உவமைப் புலவரே பாடுவீர்
நாட்டின் இறைவன் விழவைத்தான் -நாட்டு

எசுபோன் எமோரி அரசின் நகரம்
எசுபோன் தொடங்கித்தீ ஆர்சேர் -பொசுக்கியே

மேட்டிலே அர்னோனின் ஆண்டார் பொசுக்கியதே
நாட்டின் இறைவிடுத்தான் கையிலே -நாட்டிலே

எய்துபோட் டோம்யாம்; எசுபோன் நகரமும்
எய்ததால் தீபோன் வரைப்பாழாம் -எய்ததால்

மேதேபா நோப்பா நகரம் வரைப்பாழே
வேதமக்கள் பாடிக் களித்தனர் -வேத

இனத்தாரும் யாசேர் பிடித்தங்கு தங்கி
இனத்தாரும் யாசேர் எமோரி -இனத்தவர்

ஓடச்செய் தார்மக்கள் பாசான் வழிவர
நாடாதின் வன்னரசன் ஓக்கையும் -நாட்டில்

திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார் ஆங்கே:
திருமோசே அஞ்சாதே கண்டு -திருவவர்

எத்ரேயு மண்ணில்நீ மாந்தரை வீழத்து
தத்தம் கொடுத்தேன் உனக்கென்றார் -எத்ரேயு

யாரும் உயிருடன் மீதிவிடா மக்களும்
சேரவர் சேய்தமர் கொன்றார்கள் -சீரந்த

தேசத்தைக் கட்டிக்கொண் டார்கள் இனத்தரும்
மோசேயின் சொற்படி ஆங்கு
40

மோவாப் எல்லைக்கு இசுரேல் இனமக்கள் வந்தடைதலும் மோவாப் அரசன் பாலாக்கு பிலெயாமை அழைத்துவர சொல்லுதலும்

எரிகோ அரண்நகர் அக்கரையில் வந்தார்
சரிமக்கள் வந்தங்கு தங்க -கரைவிட்டு

வாரா கடற்போல் மலைசுற்றி தங்கினர்
சீரார் இளைப்பாற மக்களின் -பேரிரைச்சல்

மோவாப் இசுரேலின் அண்ணன் வழிவந்தோர்
மோவாய் அரசனாம் பாலாக்கு -மோவாப்பின்

எல்லையிலே சென்றார் இசுரேலர், எல்மக்கள்
எல்லையிலே கண்டதும் அஞ்சினான் -எல்லையில்

அண்ணனோ தம்பியோ என்னடா நாட்டிலே
அண்ணன் வழிவந்த பாலாக்கும் -எண்ணம்

எரிதீதே என்பதால் மீதியர் முன்னே
எரிசொல்லாய்ச் சொன்னான் பிழன்றே -சரிமக்காள்

மீதியரே பாரீரோ பங்காளி மக்களை
மீதிவிடா மேயும் வெளிஆப்போல் -வேதனை

தந்திட வந்தார் இனமக்கள், என்செய்வோம்
நந்நாமும் பாலாக்கும் சொல்லிட -அந்நாளில்

பெத்தூர்வாழ் மாந்தன் பிலேயாம் அறிவேன்யான்
சித்தனவன் சொன்னச்சொல் மாறாதே -பெத்தூர்போய்

அம்மாந்தன் கொண்டுவர மூப்பர் அனுப்புவோம்
இம்மட்டும் வந்திடச் சொல்லுமின்னே -அம்மானே

பேயோர் மகனேகேள் வந்தார் எகிப்தினின்
வேயா இனமக்கள் மாக்கடல்போல் -பேயோர்

மகனே அறிவேன்யான் நீர்வாழ்த்த வாழ்வர்
இகத்தில் கெடுசொல்லென் வீழ்வர் -தகையாய்க்

குறிக்கூலி கையேந்தி மூப்பர் விரைந்து
குறிக்காரன் வீட்டில் அரசன் -குறிகேட்க

ஆளனுப்பி விட்டாரென் சொல்லி வருவீரே
கோளரசன் சொல்கேட்டு என்றதும் -கோளவனில்

கோளரசர் கர்த்தரே சொல்படி செய்வேன்யான்
ஆளவரே நீரும் இராத்தங்கும் -கோளரசர்

சொல்கேட்டு வந்திடுவேன் சொல்ல, இராத்தங்கி
சொல்படி மோவா பியர்
41

பிலெயாம் கர்த்தர் சொல்படி பிரபுக்களை திருப்பி அனுப்ப, பாலாக் அவர்களிலும் மேலானவர்களை அனுப்புதல்

இரவிலே தேவன் பிலெயாமே யாரோ
இராத்தங்கி உள்ளார் எனக்கேள் -இராத்தங்கு

மக்கள் இனவரசன் மோவாப்பின் ஆட்களே
தக்கார் குறிகேட்க வந்தனர் -அக்காண்

கெடுசொல் உரைத்திட கூலி கொணர்ந்தார்
கெடுசொல் உரைத்திட்டால் போரில் -கெடுசொல்

பலிக்கவே பாலாக்கு மக்கள் இனத்தார்
பலியாக்க திட்டம் புரிந்தான் -இலையவர்

வாழ்த்துபெற்ற நன்மக்கள் அவ்விசு ரேலினமே
வாழ்த்துபெற்ற அம்மக்கள் வாழ்த்தில்லா -பாழ்க்கக்

கெடுசொல் எதும்சொல்லாய், போகாதே நீயும்
அடைத்தேன் வழியை உனதில் -விடைசொல்ல

காலை எழுந்த பிலெயாமும் மூப்பரை
வேலைவாய்க்கா போனதே கர்த்தரும் -சீலவர்

வந்திட உத்தரவு தந்திட வில்லையே
வந்தவழி செல்மின்னே நீர்தானே -வந்தோர்

முகம்வாடி மூப்பர் வழிசென்று சொன்னார்
சிகையோன் பிலெயாம் வராதே -நகையின்றி

விட்டான் வழிசெல்ல என்றே அரசனும்
விட்டான் அதிபரே போய்வாரும் -நட்டாண்

வழிவந்த நாட்டின் அதிபர்கள் சென்று
வழிவர தாமதம் செய்யீர் -அழிசொல்லைச்

சொல்லிட பார்பணம் மிக்கதாய் தந்திடுவேன்
சொல்செய்வேன் வாரும் விரைந்தென்றார் -சொல்கேள்

பிலெயாமோ, வெள்ளிபொன் வீடுநிறை தந்து
பிலெயாமை வாங்கயான் அல்லோ? -பிலெயாமோ

தேவன்சொல் மீறா திருப்பேன் தரித்திரும்
தேவன்சொல் கேட்பேன் இரவு
42

பிலெயாமை கர்த்தர் போகச் சொல்லியும் வழிமறித்தலும், பிலேயாமின் கழுதை பேசுதலும், கர்த்தர் தூதனை அவன் காணுதலும்

இரவிலே தேவன்: இவர்மக்கள் கூட்டி
விரைபோக வந்தால் கிளம்பு -விரைந்தெந்த

சொல்லும் பகராதே யான்சொல்லும் சொல்மட்டும்
சொல்லிடுவாய் என்றார் திருவிறைவன் -சொல்கேட்

டெழுந்தவன் தன்னுடைய சொத்தாம் சிறப்புக்
கழுதைமேல் சேணம் இடுத்து -கழுதை

வழிசெல்ல தேவன் பிலெயாம் மனதின்
அழிசொல் தனையறிந்து போனார் -அழிப்பான்

மனதறிவார் கர்த்தர் மகராசன் தானே
மனதின் அழிநினைவு காட்ட -அனுக்கவே

விண்தூதன் வாளேந்தி நின்றான் வழியிலே
விண்தூதன் கண்டு கனைத்திட -மண்ணில்

கழுதை கனைத்து வயலிலே ஓட
கழுதை கடிதோ டுவதை -கழுதையின்

மேலிருந்த மாந்தன் அறிவின்றி சொன்னானே
சாலைசெல் என்றே அடித்தனன் -மேலது

சாலை வழியில் இருமதில் ஊடாக
சாலைச்செல் அல்லை இறைதூது -சாலைவழி

நிற்கவும் அல்லும் பிலெயாம்கால் தேய்த்திட
நிற்பதேன் அல்லே அடித்தனன் -உற்ற

வழியில் இடம்வலம் போகா படியே
வழிமறித்து தூதனும் நிற்க -வழியில்

கழுதை அமர்ந்ததே செல்லாமல் ஆங்கு
கழிகொண்டு அல்லை அடிக்க -வழியில்

கழுதையின் வாய்தனை கர்த்தர் திறக்க
கழுதையும் பேசியதே ஏனோ -கழியால்

அழவடிக் கின்றீரோ மூன்றுமுறை செய்யென்?
கழியன்றி வாளென் பலிநீ -கழுதையே

கேலிசெய் கின்றாயோ என்னைநீ கண்டுத்தான்?
காலமுதல் இந்நாள் வரையானே -காலமே

சேர்த்திட்ட அல்லன்றோ? இப்படியான் என்றேனும்
சோர்வாகச் செய்தேனோ சொல்மின்னே -சேர்ந்தநாள்

காலமுதல் இந்நாள் வரைசெய்யா அல்நீயே
காலமென் நல்லாரும் கண்திறக்க -சீலவன்

வாள்பிடித்து நிற்பதைக் கண்டு விழுந்துபணிந்
தாள்வணங்கிக் கேட்டான் இறைதூதன் -வாள்கை

இறைதூதன் சொன்னான், கழுதை விலகா
கறையோனே செத்திருப்பாய் கேள்நீ -இறைநிற்ப

கண்டதும் போயிற்றே தான்விலகி, இல்லென்றால்
கண்டதுண்டம் ஆகியிருப் பாய்நீயும் -விண்ணார்

இறைவா எதிர்பாவம் செய்தேன். அறியேன்
இறைவா இதுவுமது சித்தம் -கறையென்றால்

போகேன்; இறைதூதன் போவாய் மனிதரோடு
ஆகினும் என்சொல்லே சொல்
43

பிலெயாம் கீரேயாத் ஊசோத்து போய் காலையில் பாகால் மேட்டில் இருந்து இசுரேல் பாளையத்தை பார்த்தல்

மோவாப் அதிபர் சிலரை அனுப்பினர்
மோவாப் அரசனிடம் தூதுச்சொல் -மோவாப்

அரசனாம் பாலாக்கு அர்னோன் நதியின்
கரைவரை வந்து அழைத்து -கரைமகன்

பாலாக்கும் கேட்டான் பிலெயாமே பாலாக்கு
ஆலாக நின்றரசன் கூப்பிட்டும் -சீலோனே

ஏனோ வராது, பணம்தரேன் என்நினைத்தோ
ஏனோ பகர்மின் எனக்கின்று -கோனாண்

பிலெயாமோ; வந்தேன் இதோநான் அரசே
பிலெயாவாய் ஏதும் பகர்மோ -பிலெயாம்வாய்

தன்னில் இறைத்தர அஃதிலா வேறொன்றும்
தன்னாலே வாராது கேள்மின்னே -அன்னானும்

பாலாக் உடன்சென்று; கீரியாத் ஊசோத்து
பாலாக் நகர்சேர பாலாக்கு -மேலான

ஊனடித்து சீலவன் என்றே நிணந்தந்தான்
ஊனுண்டார் ஆங்கே களித்தவரும் -வானிலே

எல்போய் விடியவும் பாலாக் பிலேயாமை
செல்வோம்நாம் பாகாலின் மேட்டிற்கு -வல்லாண்

இடத்தினின்று மக்களினப் பாளையம் பார்க்க
இடத்திலி ருந்தார் இனம்
44

பிலெயாமின் முதல்பலிகளுக்கு கர்த்தர் வாக்கு அருளுதல்

மலையுச்சி சென்றவர் செய்வித்தார் ஏழு
நிலையில் பலிபீடம் தன்னை -மலைமேலே

ஏழேறு ஏழாடு ஏழுபீடம் மேற்பலி
ஏழெல்லாம் எண்ணிக்கை செய்தோனும் -கீழே

எரிநெருப்பில் மாக்கள் பலியிட்ட பின்னே
எரிநெருப்பின் பக்கம்நீர் நில்லும் -அரைக்கட்டி

நான்செல்வேன் கர்த்தர்சொல் கேட்க நிமித்தம்காண்
ஈன்மகன் சென்றான் விரைந்தங்கு -தான்சென்றோன்

விண்ணார் இறங்கிவந்து சந்தித்தார் ஈனனை
விண்ணா ரிடஞ்சொன்னான் வீணனும் -விண்ணிறைவா

ஏழேழாய் ஆடேறு தந்தேன் பலியாக
வேழிறைவா சொல்லும் கெடுசொல்லே -ஆழிறை

கர்த்தரும் இட்டார் பிலெயாமின் வாயிலே
கர்த்தரங்கு இட்டதும் வந்தானே -கர்த்தரின்

சொல்லை அறிவிக்க; பாலாக்கும் சொல்லிடும்
சொல்லழிக்கும் பேரினச் சொல்லென்றே -சொல்லவர்

இட்டதை சொன்னானே சொல்மாறா வாக்கோனும்
இட்டார் இனமக்கள் தேவனும் -நட்டார்

எனவாழ்த்த, கர்த்தர் வெறுக்கா இனத்தை
தினம்வெறுப் பேனோ பதர்யான் -இனத்தாரைக்

கன்மலை யுச்சியில் நல்லானைக் கண்டேன்நான்,
குன்றுகள் மீதிருந்துப் பார்க்கிறேன்; -நன்னினம்

சேராக் கலவார் தனித்து வசிப்பரே
நேரார் இறைவனும் வாழ்த்தினார் -நேரார்

இறைவன் தொடர்ந்து இசுரேலாம் யாக்கோப்
நிறைத்தூளை எண்ணி முடிக்க -கறையோர்

மனிதருள் யாருளரோ காண்மின்; இசுரேல்
நனிகாற்பங் கெண்ணலா மோகேள் -இனிமண்ணில்

நீதிசெய் நல்மனிதன் போலே மரணிக்க
நீதிசெய் யாதார் விழைவரே -நீதிசெய்

யாக்கோபைப் போல மரணிக்க வாக்கனும்
வாக்குரைத்தான் ஆங்கே விழைந்தங்கு -வாக்கேள்

அடடா எதிரி அழியக் கெடுசொல்
விடுமெனச் சொன்னாலே நீரோ -விடுத்தீர்நல்

வாழ்த்துரை, என்னயிது வாழ்த்தினீர் என்னெதிரி
வாழ்த்தாது சொல்லும் கெடுசொல்லே -வாழ்த்திய

ஈனனும் சொன்னான்: திருக்கர்த்தர் சொல்லைத்தான்
ஈனன் பகர்வேன் கடமையாய் -வானங்கீழ்

வாரும் கடைக்காண வேறிடம் செல்வோம்யாம்
சேரங்கு பின்கெடு சொல்
45

பிலெயாமின் இரண்டாம் பலிகளுக்கு கர்த்தர் வாக்கு அருளுதல்

ஒருவேளை எல்லா இனக்கூட்டம் காண்நீர்
திருவின்சொல் என்வாழ்த் தினீரோ -வரவேண்டும்

என்னோடு உச்சி பிசுகாவின் போனதும்
நன்வெளியில் பார்த்தான் கடைமக்கள் -வன்பாலை

சோப்பீம் வெளியதில் வாக்கன் தனைநிறுத்தி
சோப்பீம் தனிலே பலிபீடம் -தீப்பிழை

பாலாக்கு செய்வித்தான் முன்போலே ஏழாக
சீலவர் சொல்கேட் டிடும்நீரே -கோலவன்

பாலாக்கு மீதிய மேன்மக் களோடுநிற்க
சீலவர் சொல்கேட்கப் போனானே -சீலவர்

சொல்தந்தார் வாழ்த்துரையே சொல்கேட்டு வந்தனன்
அல்பீடம் முன்னே மகனவனும் -நல்லோனே

சிப்போர்சேய் பாலாக்கே கேள்மின்னே நீரிங்கு
அப்படிப்பொய்ச் சொல்ல மனிதனல்ல -இப்படிச்

சொல்மாறிச் சொல்ல மனிதச்சேய் அல்லவே
சொல்மாறா நிற்கும் இறைவனார் -சொல்லவர்

வாழ்த்துரைக்கக் கட்டளை பெற்றேனே வாழ்த்துரைப்பேன்
வாழ்மக்கள் தன்னைநான் மாற்றாமல் -வாழ்த்துவேன்

யாக்கோபில் சால்பில் குணமில் இசுரேலில்
தீக்குற்றம் ஒன்றுமிலை கேள்மின்னே -ஆக்கமிகு

யாக்கோப் இசுரேல் இனத்தாரின் தேவனாம்
நீக்கமற நிற்கின்றார் கர்த்தர்தான் -ஆக்கம்

அரசனின் வெற்றிச் செருக்கு இனம்மேல்
இருப்பதை பார்க்கின்றேன் யான்தான் -திருக்கர்த்தர்

தேவன் அவர்தாம் எகிப்தினின்று கூட்டிவந்தார்
தேவன் புறப்படப் பண்ணினார்; -தேவமக்கள்

காண்டா மிருகத்திற் கீடாய்ப் பெலனுண்டு
ஆண்டவர் சொல்லிது கேள்மின்னே -ஆண்டிட

தீச்சிங்கம் போலெழும்பி உண்பார் இரைப்பிடித்து
தீச்சிங்கம் விட்டுவிடா போலேதான் -வீச்சுதிரம்

உண்ணுவர் யாக்கோப் எதிர்மந் திரமுமில்
மண்ணில் எதிர்குறியும் இல்லிங்கு -மண்ணோனும்

ஐயா கெடுசொல் உரைப்பீர் எனச்சொன்னால்
ஐயோ இசுரேலை வாழ்த்தினீர் -ஐயா

கெடுசொல் இனவாழ்த்து கர்த்தர் தருஞ்சொல்
கடைச்சொன்னேன் அல்லவா நான்
46

பிலெயாம் மூன்றாம் பலிகளை ஆயத்தம் செய்து நிமித்தம் பார்க்க போகாமல் இசுரேலைப் பார்த்து பேச, தேவ ஆவி அவன் மேல் இறங்குதல்

கெடுசொல்லைச் சொல்லிட வேறிடம் போவோம்
கெடுசொல் தரவே இறைவன் -இடுவார்

எசிமோன் எதிரான பேயோர் மலையில்
எசிமோனில் கட்டிபலி தந்து -இசைந்தவர்

மூன்றுமுறை இட்ட பலியெல்லாம் ஏழேறு
மூன்றுமுறை யும்மேதான் ஏழாடு -மூன்றிலும்

ஏழாய் பலிபீடம் என்றே பலியிட்டான்
வேழார் கெடுசொல் விழைந்தவன் -பாழாகா

வாழ்த்தி உரைப்ப திறைச்சித்தம் என்கண்டு
வாழ்த்தும் உரைகேட்கப் போகாது -வாழ்மக்கள்

தங்கிய பாலைவனம் நோக்கிட தங்கினார்
எங்கும் நிறையாவி மேல்தானே -இங்கேதான்

கண்திறந்து பேசுகின்றேன் கண்திறந்த தேயானும்
விண்ணார்சொல் கேட்டுப் பணிந்தப்போ -மண்ணிலே

யாக்கோப்பின் கூடாரம் மற்றும் வசிப்பிடம்
வாக்கன் உரைத்தான் அழகன்றோ -போக்கு

பரவிப்போம் ஆறோ மனையும், நதியின்
கரையிலுள்ள தோட்டமோ கூடம், -வரையிலார்

நாட்டின சேறுமண நல்மரமோ நல்லிடம்,
நீட்டநீர் கேதுரு வேதானோ -காட்டில்

அவர்நீர்ச்சால் பாயும்; அவர்வித்து கீழே
தவநீர்ப் பரவும்; அரசன் -தவமானாம்

ஆகாகைப் பார்க்கிலும் மேலாண்; அவரரசு
போகாது மேன்மையடை யும்தானே. -வேகு

எகிப்தினின்று கூட்டிவந்து தேவனும், காண்டா
மிகைமிருகத் தீடாய்ப் பெலனும்; -இகத்தில்

எதிரியான நாடுகள் தீக்கிரை, என்னிட்
எதிரியை அம்புகளால் எய்வான். -எதிரேதான்

சிங்கம்போல் தீச்சிங்கம் போல மடங்கியே
தங்கியிரு மக்களெ ழுப்புமா -தங்கன்யார்?

உங்களை வாழ்த்துவோன் வாழ்த்துபெற்று, சொல்கெடு
உங்களைச் சொல்வோனும் கெட்டிடுவான் -ஆங்கேதான்

பாலாக்கு கையொடு கைத்தட்டி மிச்சினமாய்
சீலோன் எனநினைத்தே கூட்டிவந்தேன் -காலைமுதல்

மும்முறை வாழ்த்தினீர் எம்மெதிரி. என்னெதிர்
அம்மானே நிற்காதே ஓடுமின்னே -தம்பி

பணமும் நிலைதருவேன் என்றேன் உனக்கு
பணநிலை வாரா தடுத்தார் -குணவான்

திருக்கர்த்தர் இன்றுத்தான்; பாலாக்கே கேளும்
திருச்சொல்லே சொல்வேன் உரைத்து -திருதரும்

பாலாகே வீடுநிறை பொன்வெள்ளி தந்தாலும்
சீலவர் சொல்லே உரைப்பேன்நான் -பாலாக்கின்

தூதுவர் வந்தா ரிடஞ்சொன்னே னன்றோயான்
மேதவர் செய்வ துரைத்து
47

பிலேயாம் மேலும் வரும் காரியங்களை உரைத்தல்

பேயோர்சேய் சொல்லென் பிலெயாம் உரைக்கின்றேன்
தேயவர் முன்பணிந்தப் போகண்கள் -வேயிற்றே

கண்டதுகாண்! காண்பேன் அவரைநான் இன்றல்ல
கண்காண் அருகில் இலைதானே -கண்ணாய்

ஒருவிண்மீன் யாக்கோபில் வந்துதிக்கும் கேளாய்
ஒருசெங்கோல் வந்தே இசுரேல் -திருமக்கள்

ஆளவரும்; மோவாப் அழிந்திடும் சேத்தழியும்
கோளத்தில் ஏதோம் கவர்ந்திடுவர் -நாளழித்து

சேயீர் எதிரிகள் வீழ்வச மாக்குவர்;
சேயாம் இசுரவேல் மேன்செய்வர். -வேயோராம்

யாக்கோ பிலிருந்து தோன்றுமவர் ஆளுகை
வாக்குமிதிப் பட்டண மிட்டுப்போம். -வாக்கே

அமலேக்கு முந்தி யெழும்பிய நீயோ
இமைமுடிவில் முற்றும் நசிந்து -தமரான

கேனியனே வாசம் அரணுள்ளே; கூட்டைநீ
கேனிமலை மேற்கட்டி னாயோகேள் -கேனியனே

கேனி அழிந்திடுவான்; ஆசூரும் மேலிட்டு
கேனி சிறைபிடித்துப் போகிடத் -தானிங்கு

எத்தனைநாள் செல்லுமோ என்றான். உரைத்தபின்
தத்தம் வழிசென்றா ரங்கு
48

மோவாபின் சிலைகளுக்கு இசுரேலர் பணிதலும் கர்த்தரின் வாதையும்

சித்தீம் வனத்திலே சிந்தை இழந்தோராய்
தத்தம் இனம்விட்டு மோவாபின் -தத்தை

மடந்தையரை கண்டுக் களிகொண்டார் மக்கள்
இடத்தினிலே வேசித் தனஞ்செய் -திடமனதில்

விண்ணவர் சொற்கேளா மாந்தர் இனம்வீணே
மண்ணினால் செய்வித்த மோவாபின் -மண்ணிற்ப்

படைத்த உணவை புசித்தே மடந்தை
இடைக்கண்டு ஆங்கே குலாவ -விடைக்கொடா

பாகாலின் பேயோரைப் பற்றிய மாந்தருள்
ஆகாது நன்சொல்லை கேளாது -வேகும்சிற்

றேகச் சுகத்திற்காய் கர்த்தரை விட்டங்கு
ஏகமாய்ச் சென்றார் இனத்தாரே -ஆகா

வழிசென்றக் காரணத்தால் வாதை விடுத்தார்
அழித்தூக்கு ஞாமுன் வழுவோர் -அழித்தூக்கு

செய்திட்டார் சொல்லாரின் சொல்படி அன்றங்கே
செய்தயினத் தாரும் அழுது
49

கர்த்தருக்கு முன்பாக பினகாசின் பக்தி வைராக்கியத்தால் வாதை நின்று போகுதலும் அவனை கர்த்தர் உயர்த்துதலும்

அழுகைக் குரலோடு மக்கள் கலங்க
விழுந்திட்ட மக்களையும் காணா -வழுசிம்ரி

வன்புணர்வு செய்ய கசுபி பெயர்பெண்ணை
அன்று; பினகாசும் கண்டவன் -வன்னாண்

வழிசெய் நிலைப்பொறுக்கா ஆசன் மகனும்
வழிசென்றப் பாதையில் சென்று -அழித்தான்

கழிவேலைக் கொண்டு இருவரையும் ஆங்கு;
அழிவாதை நின்றதே அன்று -வழுவோர்

பினகாசு கொன்றதால் கர்த்தரும் மண்ணில்
இனத்தில் இவன்போலே செய்ய -இனக்கர்த்தர்

வைராக் கியமுண்டோ, ஆதலால் என்முன்னே
நேராணின் தோன்றல் பணிசெய்வர் -சீராரும்

போற்றினார் ஆண்மகனின் வைராக் கியமாங்கு
ஆற்றா தழிமோவாப் சூதாலே -சீற்றம்

வரவைத்தார் பேயோரின் காரணத்தால் தானே
சிரம்தாழ்ந்தார் வீணர் இனம்
50

கானான் செல்லும்முன் மக்கட்தொகை எண்ணிக்கை செய்தல்

நேர்கர்த்தர் நேராண் இருவரை நோக்கிச்சொல்
நேர்மக்கள் எண்ணிக்கை செய்வீரே -சீர்தேசம்

தன்னில்வாழ் நன்னிலம் தன்னை பிரித்திட
என்றதும் கீழ்படிந்தார் ஆங்குத்தான் -அன்னாரும்

எண்ணிக்கை முன்ரூபன் செய்தாரே -மண்ணிலே
எண்ணிக்கை நாற்பத்து மூவா யிரத்தோடு

எண்ணிக்கை ஏழுநூற்று முப்பது -மண்ணிலே
எண்ணிக்கை பின்சிமியோன் செய்தாரே விண்சொல்லி

எண்ண இருபத்தீ ராயிரமும் மண்ணினம்
எண்ணிக்கை நூறீரே காத்தினமோ -மண்ணிலே

எண்ணிக்கை நாற்பது ஆயிரமும் ஐநூறும்
தண்யூதா ஐநூறு சேர்த்தெண்ண -எண்ண

எழுபத்தி ஆறா யிரமினம் சீரார்
வழியிசக் காரினம் முந்நூ -றிழைவரும்

சேர்த்தே அறுபத்து நாலா யிரமினம்
சேர்செபு லோனினமோ ஐநூறு -சேர்த்தெண்ணி

பத்தா யிரம்ஆறு; எப்பிராயிம் எண்ணிக்கை
பத்தா யிரமூன்றும் ஆயிரமீர் -பத்தது

ஐம்பதே; சீர்மனாசே நல்லாரோ எண்ணிக்கை
ஐம்பதாய் ஆயிரம் ஆயிரமீர் -ஐம்பதோடு

ஆறா யிரத்தைம் பதுவே; இனத்தாராம்
மாறனவன் பென்யமீனின் எண்ணிக்கை -ஆறாக

நூறுசேர்ந்தே நாற்பத்தி ஐயா யிரம்தானே
நூறு அறுநூற்று நாற்பதும் -நேறினம்

நானூறும் சேர்த்தெண்ண தாண்வந்தான் வெற்றாகக்
கானானை விட்டான் இருவராய் -கானகத்தில்

பேரினமாய் வந்தனரே தாண்ணினம் பேரினம்
நேரினத்தார் ஆசேரின் எண்ணிக்கை -சேரவர்

நானூறும் மூவா யிரத்தோடு சேர்த்தெண்ணி
வானங்கீழ் ஐம்பது ஆயிரமே -மேதவர்

நானூறும் சேர்நாற் பதினா யிரம்தானே
மேனாளாம் நப்தலி யாங்கேதான் -வானின்கீழ்

எண்ணிக்கை லேவி இருபத்து மூன்றாக
எண்ணினார் ஆயிரத்தை; ஆனாலும் -எண்ணிக்கை

எண்ணிட்ட லேவி ஒருமாதம் மேல்மற்றோர்
எண்ணி வயதோ இருபதுமேல் -எண்ணிக்கை

எண்ணிய மக்களுள் பாலையில் சாவீரே
விண்ணார் உரைத்தவர் யாருமிலை -தேவையிலார்

ஆறு இலட்சமும் ஓரா யிரத்தோடு
நேறி எழுநூற்று முப்பது -வேறேதான்

லேவி தவிர இனத்தாரின் எண்ணிக்கை
மேவிக் கணக்கிட்டார் ஆங்குத்தான் -ஆவிநட

நூன்மகன் யோசுவா வோடங்கு காலேப்பும்
வான்கீழ் மரித்தாரே பாலையில் -தேன்தேசம்

எண்ணிக்கை யின்படியே பங்கிடச்சொல் மக்களுக்கு
எண்ணிக்கை மேலானோர் பங்கதிகம் -எண்ணிக்

குறைந்தோர் குறைவாகப் பங்கிடச்சொல் கானான்
குறைந்த இனத்தார் இடமேல் -கறையாகக்

கொள்ளா திருக்கவே சீட்டுபோடு காணியில்
தள்ளுவ தாகாது சீட்டுவிழ -அள்ளவள்ளக்

குன்றா நிலமிருக்க நேரினமும் கள்ளமாய்
வன்செயல் செய்யா திருக்கவே -அன்றுசொல்

கர்த்தரும் செய்தார் முறையாக, நற்றவர்
கர்த்தரின் சொல்லும் பலித்து
51

செலோபியாத்தின் மகள்கள் தங்கள் தகப்பனுக்கு மகன் இல்லாததால் தங்களுக்கு காணியாட்சி தர கேட்டலும், கர்த்தர் சொன்ன நியாயவிதிப் பிரமாணமும்.

யோசேப் வழியோன் மனாசே குடும்பத்தில்
தேசம்சேர் பெண்கள் செலோபியாத்தின் -பேசினர்

ஐவரும் கூடம்முன் மோசே எலெயாசார்
தேவனிடம் கேட்க விழைந்தவர் -தீவனத்தில்

எந்தையும் மாண்டார்; வழிதீயாம் கோராகு
சிந்தையால் அல்ல; மரித்தது -எந்தையும்

பாவத்தால் தானெனச் சொல்லியவர் -தேவனின்
ஆவண நீதியில் எம்காணி -பாவத்தால்

காணியில் எந்தைப் பெயரற்று போகலாமோ
காணியில் தாரும்நீர் பங்கென -காணியில்

பெண்களுக்கு பங்கு நிலையில்லா காரணத்தால்
பெண்களிடம் சொல்கேட்டுச் சொல்வேன்நான் -விண்ணாரின்

என்றவனும் மோசே திருவவர் சொல்கேட்க
வன்மரித்தோர் பிள்ளையில் காணிகள் -அன்றியும்

பெண்ணுக்குப் போய்சேர, பெண்ணுமில்லா போனாலே
மண்ணும் அவன்சோ தரன்சொத்து -மண்ணில்

சகோதரனும் இல்லென்றால் போகும் உறவின்
வகையார்க்க ஈதே இசுரேல் -இகத்தில்

விதியாகச் சொல்லிடுவாய் என்றார் திருவும்
விதியதைச் சொன்னான் சிறந்து
52

கர்த்தர் மோசேயை அபாரீம் மலைமேல் ஏறி கானான் தேசத்தை காணச் சொல்லுதலும் அவனுடைய மன்றாட்டும்.

மோசேநீ ஏறு அபாரீம் மலைமேலே
மோசேக்கு காட்டுவேன் கானானாம் -தேசமதை;

தேசத்தில் நீசேர மாட்டாயே ஆரோன்போல்
பேசா திருந்த பிழையதால் -தேசத்தை

கண்டு களித்திடு தூரத்தே என்றதும்
மண்ணிலே ஊனுள்ள யார்வர்க்கும் -விண்ணார்

இறைதானே, இம்மக்கள் மேய்ப்பனில்லா ஆடாய்
முறைவழி விட்டுப் பிழர்வார் -இறையோனே

மாந்தருள் ஓராள் தலையாக வைப்பீரே
மாந்தனவன் மன்றாட்டு செய்ததும் -மாந்தருள்

நூன்மகன் யோசுவா ஆவிபெற்றான் ஆதலால்
நூன்மகன் யோசுவாவை மூப்பர்முன் -மேன்மகன்

என்றே அறிவித் திடுவாய்நீ உந்தனின்
நன்னாவிப் பங்கில் சிறுபங்கை -நன்னாணும்

பெற்றிட தந்தேன்நான் என்றார் திருவங்கு
பெற்றவன் சொல்படி செய்து
53

பலிகளை மீண்டும் மோசேயிடம் இறைவன் சொன்னார்.

அலைந்தனர் நாற்பது ஆண்டுகள் என்றே
அலைந்திரிந்தப் போது வனத்தில் -இலைபலி

இம்மக்கள் எம்சொல் மறப்பரோ நன்முறையை
அம்மானி டஞ்சொன்னார் நேர்கர்த்தர் -அம்மான்

கவனம் செலுத்திடச் சொல்வாய் இனமே
கவனம் கவனம் இசுரேல் -அவனிடம்

சொன்னார் இறைவன் சிறப்பாய் பலியது
நன்மாத வார தினமென -அன்றே

பலிகள் தினவார மாத மெனவே
நிலைக்கர்த்தர் சொன்னார் சிறந்து -பலிதினம்

காலைமாலை ஓராடும் சேர்த்து நலமாநெய்
காலைமாலை தந்திடச் சொல்வாய்நீ -காலைமாலை

ஆடு ஒருவயதுக் குட்டியாம் காலைமாலை
ஆடை தகனித்தே நன்பலி -ஆடையாசன்

செய்த படியிலே பத்திலொரு பங்காக
நெய்யிட்ட மாவு தகித்திடச்சொல் -மெய்யார்

படியிலே காற்பங்கு சாறது ஆங்கே
அடிக்கும் ஒருஆட்டுக் குட்டி -இடிபிழிந்த

பானபலி; தூய்தலத்தில் கர்த்தருக்கு முன்சாற்றை
பானபலி வார்த்திடச் சொல்வாய்நீ - ஆனயிது

சீனாய் மலைமீது தந்திட்ட நல்விதி
ஆனாலும் நேர்மகன் மோசேநீ -சீனாய்

மலைவிதி மக்கள் நினைவூட்ட மீண்டும்
நலவிதியைச் சொல்வாய் சிறந்து -பலியது

வாரத்தில் ஆறுநாள் ஓராடும் ஏழாந்நாள்
வாரத்தின் ஓய்வுநாளே ஆதலால் -வாரவோய்

நாளதில் ஈராடு தந்திடுவீர் தீயிலே
வேளை தவறாது நீரென்றும் -நாளது

மாதப் பிறப்பிலே ஓராண்மே ஈரேறும்
மேதின் ஒருவயது குட்டியேழு -வேதவர்

நன்மாவு ஒன்றரை நற்படி தீயிடுவீர்
சொன்னார் முறையாகத் தானங்கு -என்றென்றும்

வாரத்தில் ஆறுநாள் ஓராடும் ஏழாந்நாள்
வாரத்தின் ஓய்வுநாளே ஆதலால் -வாரவோய்

நாளதில் ஈராடு தந்திடுவீர் தீயிலே
வேளை தவறாது நீரென்றும் -நாளது

மாதப் பிறப்பு நலநாளில் சேர்த்துபலி
மாத மொருக்கடாவை சேர்செலுத்து -வீதமாய்

மக்கள்செய் பாவபலி யீதேகாண் மக்களின்
தக்கா செயலுக்காய் ஆடுபலி -மக்காள்

பலியிடும் போது அளவது சாறின்
பலிக்கேற்றாப் போலிடு என்றார் -பலிச்சாறு

மாடென் அரைப்படி ஆடுபடி மூன்றிலொன்று
ஆடின் சினைக்காற் படியாக -நாடோரே

பாசுகா மாதமுதல் நாளாம் பதிநான்கில்
பாசுகா ஆசரிக்கச் சொல்லிடு -பாசுகா

ஏழுநாள் அப்பம் புளிப்பின்றி செய்யச்சொல்
ஏழுநாளும் அப்பம் புசித்திடுவீர் -ஏழுநாள்

பாசுகா பண்டிகை நன்றே பதினைந்தில்
பாசுகா நன்னாள் முதலிலே -தேசத்தார்

கூடிவரச் சொல்லிடு ஓய்வுநாள் பாசுகா
கூடி யினத்தார்கொண் டாடுவீர் -கூடவே

மாதப் பிறப்பின் பலிபோலே அன்றிட்டு
வீதம் வகைசெய்வீர் மக்களே -மாதபலி

கூடவே காலைமாலை நற்பலிகள் தந்திடுவீர்
நாடது விட்ட நினைவாக -நாடோரே

ஏழுநாள் நித்தம் செலுத்திடுவீர் தீத்தகனம்
ஏழுநாள் பாசுகா பண்டிகையே -ஏழுநாளில்

காலைமாலை சேர்ப்பலி செய்திடுவீர் மக்களே
வேலைகள் ஏழில்செய் யாதோய்ந்து -சீலோரே

அந்நாட்கள் பின்னர் முதற்கனி தந்திடும்
அந்நாளில் கூடிநீர் ஆராதி -அந்நாளும்

வேலை செயவேண்டாம்; மாதப் பிறப்புபலி
சீலார் செயச்சொல் சிறந்தங்கு -மேலாம்

கனிநாளாம் அன்று செலுத்திடுவீர் தீயில்
கனிநாளும் நேரார் திருநாள் -கனிநாளில்

காலைமாலை சேர்ப்பலி செய்திடுவீர் மக்களே
வேலைகள் ஏதுஞ்செய் யாது
54

எக்காளப் பண்டிகையின் நியமங்கள்

ஏழாந் திருந்திங்கள் முன்முதன்னாள் கூடிடச்செய்
வேழார் திருமக்கள் தூயாக -வேழாரோ

அந்நாளில் வேலைசெய்யக் கூடாதே எக்காளம்
அந்நாளில் மக்களும் ஊதுச்சொல் -அந்நாளில்

நல்மணமாய் காளையொன்றும் ஆடொன்றும் ஏழாக
நல்லாட்டுக் குட்டிகளும் சேர்ப்பலி -நல்மாவு

நெய்யிட்டு நன்றாய்ப் பிசைந்து தகிக்கச்சொல்
செய்யச்சொல் மாதப் பிறப்பினது -செய்பலியை

கூட இடச்சொல்வாய் சேர்த்தங்கு பானபலி
நாடவர் வார்க்கச்சொல் நேராக -சீடரை

காலைமாலை நற்பலி சேர்த்து தவறாமல்
சோலைநாட்டில் சீலார் இடச்சொல்வாய் -சீலாரே

ஏழாந் திருத்திங்கள் பத்தாம் திருநாளாம்
வேழார்க்கு கூடிவரும் நாளாக -வேழைபலி

மாதப் பிறப்பினதுப் போலே இடச்சொல்வாய்
வீதம் செயச்சொல் அவைகளை -மாதம்

திருயேழில் ஐந்துநாள் சென்றால் அவையார்
திருக்கூட்ட நாளாக சேர்ந்து -திருநாளில்

ஓய்ந்திருந்து அன்றும் தகனபலி தந்திடுவீர்
ஓய்வுநாளில் காளை பதிமூன்றும் -வேய்க்கடா

ஈராய் ஒருவயது மேக்குட்டி பத்தோடு
ஈரீராய் நெய்பிசைந்த மாவோடு -சேரங்கு

காலைமாலை நற்பலிசேர் வெள்ளாட்டு ஆண்கடா
சீலாக ஒன்றை இடுவித்து -சாலாக

ஈராம் திருநாளில் பன்னிரண்டு காளைகளும்
ஈராக ஆட்டுக் கடாவோடு -ஈரீர்சேர்

பத்தோடு மேக்குட்டி நெய்மா முறைசேர்த்து
அத்தோடு காலைமாலை நற்பலியும் -அத்தோடு

பானபலி எல்லாம் செலுத்திடுவீர் அன்றுத்தான்
பானபலி நெய்மா முறையாக -ஆனபடி

மூன்றாம் திருநாள் குறைப்பீர் ஒருகாளை
நான்கில் குறைப்பீர் ஒருகாளை -மேன்பலி

ஐந்தில் குறைப்பீர் ஒருகாளை ஆறிலும்
சேந்து குறைப்பீர் ஒருகாளை -தீந்தக

ஏழில் குறைப்பீர் ஒருகாளை யிட்டிடுவீர்
வேழாரே எட்டாம் திருநாளோ -வாழுமக்கு

சீர்நாளே ஒய்ந்திருந்து மாதப் பிறப்பினது
சீர்ப்பலியை இட்டிடுவீர் நன்றென -சீர்க்கர்த்தர்

உம்பலிகள் இட்டிடும் நன்முறை ஈதென
தம்மக்கள் நாட்டில் சிறப்பிடவே -அம்மானும்

சொல்லை திருவிதியாய்ச் சொன்னான்; திருச்சொல்லை
நல்லார் இசுரேலும் கேட்டு
55

பெண்களின் காணிக்கைகள் பொருத்தனைகள் பற்றிய நியமம்

திருக்கர்த்தர் சொல்லிது கேளீரோ மூப்பர்
திருமோசே சொன்னான் விதியே -திருவிற்கு

காணிக்கை தந்திடுவேன் என்றுநா பேசிச்சொல்
காணிக்கை செய்தவ றாதுநீவிர் -காணியிலே

காணிக்கை செய்வேன் எனச்சொல் லணங்கவள்
மாணத் திருவிற்குச் செய்வேனென் -காணிக்கை

செய்ய மணமுடிக்கா பெண்ணின்சொல் தந்தைகேள்
செய்ய இயலாதென் சொன்னாலே -செய்நேமம்

விட்டவள் போனாலும் தீங்கில்லை; தந்தைகேள்
நட்டாண் கறைபேசாப் போனாலே -விட்டிடாது

செய்திடச் சொல்வாய்நீ நேமத்தை மாந்தனைச்
செய்மணப் பெண்ணென்றால் காணிக்கைச் -செய்சொற்கேள்

மாந்தன் தடுத்திட்டால் ஆங்குத் -தடுத்ததால்
மாந்தனால் தீங்கில் அவளுக்கு; -மாந்தன்

தடுக்க அவள்கணவன் செய்தால் விடுத்து
தடுக்கா திருந்தாலே இட்டு -நடுவில்

தடுத்திட மாந்தர் நிலையும் தடுக்கா
விடுத்தும் கொடுக்காது போனால் -விடுத்த

கடும்பழி மாந்தனின் மேலே; நடுவிலே
தள்ளப் படுபெண்ணோ கைம்பெண்ணோ -கள்ளமிலா

வாய்ச்சொல் படியேதான் செய்யச்சொல் பெண்டிரை
வாய்ச்சொல் மடந்தை முறை
56

மீதியான் மீது போர்தொடுக்க கர்த்தர் சொல்ல இனத்தார் செய்தலும் கொள்ளையை பங்கிடுதலும்.

திருக்கர்த்தர் சொன்னார்சொல் மீதியான் தேசம்
திருவினம் சார்பாய் பழியை -திருமோசே

நீவாங்கிப் பின்னர் வழிவந்தோர் மூப்பரோடு
நீவைக்கப் பட்டு மரித்திட -நீவாங்கென்

மோசே இனத்தார்முன் சொன்னான் திருசார்பாய்
தேசமாம் மீதியானை தீர்க்கவே -தேசத்தார்

போர்வீரர் வாரும் இனத்திற்கு ஆயிரம்பேர்
போர்செய் நலமாண் சிறந்தங்கு -போர்வீரர்

பத்தும்சேர் ஈருமாய் ஆயிரம் அத்தனைபேர்
எத்தராம் மீதியான் மேற்போரில் -சித்தம்

இறைவன் நிறைவேற்ற ஆசன் மகனாம்
நிறைபின காசொடு கூட -நிறைபொன்செல்

ஐவரைக் கொன்றிட்டு கொள்ளையிட்டு வந்தனர்
தீவாயன் பேயோர்சேய் பீலேயாம் -ஐவர்சேர்

கொன்றனர் ஆங்கு இனத்தாரும் கொன்றுகொள்ளை
அன்றிட் டவர்வந் தனரினம் -அன்றவர்

கொள்ளையில் ஈராகப் பங்கிட ஒன்றவைக்கும்
கொள்ளையில் மீதிவீ ரர்க்குமாக -கொள்ளையைக்

காண்மோசே பெண்களை ஏன்விட்டீர் கொல்லாது
காண்பேயோர் சேய்பிலெயாம் சொல்லாலே -வீண்மக்கள்

ஈனர் விழச்செய்தார் ஆதலால் ஆண்கலவி
ஈனர்சேர் பெண்களை கொன்றிடுவீர் -ஈனரில்

பெண்களை விட்டுவிடும் உம்போ கமதற்காய்
பெண்களை வெட்டியதால் தீட்டாமே -பெண்ஆண்கள்

செய்கொலை தீட்டாமே எல்லாம் நெருப்பிட்டுச்
செய்செலா நீரால் கழுவிட்டு -மெய்யும்

தலைமேல் கழிநீரை இட்டுகழித் தீட்டை
நலமாடை ஏழில் துவைத்து -நலமான

கொள்ளையின் பங்கில் அவைப்பங்கில் லேவிக்கு
கொள்ளைபங்கில் வீரரின் ஆசனுக்கு -கொள்ளையில்

ஐம்பதில் ஒன்றாக லேவிக்கும், ஐந்நூறில்
தாம்மொன்றே ஆசனின் பங்கிடு -ஆம்நன்றாய்

ஆயிரம் ஈரோ டெழுபது மாடுகள்
வேயாத ஒன்றோ டறுபது -ஆயிரமாம்

நற்கழுதை ஆறு இலட்சமும் ஏழுபத்தும்
நற்றா யிரமைந்தாம் ஆடுகள் -நற்குல

முப்பத்தீ ராயிரம் ஆணறியா பெண்டிரும்
தப்பாது பங்கிட்டான் மோசேயும் -அப்போது

கர்த்தர்சொல் நின்றான் திருவங்கு ஆசனுக்கும்
கர்த்தர்செய் லேவிக்கும் தந்தபின் -கர்த்தர்முன்

ஆயிரம்பேர் நற்றலைவர் நூறுபேர் நற்றலைவர்
ஆயிரம் பன்னிரண்டு சென்றோம்யாம் -தேயாது

மீண்டோம் சிறப்பாய் எனவே பசும்பொன்னால்
காண்கொள் அணிகலன் ஈந்திட -காண்மக்காள்

பொன்னிறை காணீர் பதினாறு ஆயிரமும்
தன்சேர் எழுநூற்று ஐம்பதும் -பொன்சேக்கல்

பொன்வாங்கி நல்லினத்தார் ஞாபகம் செய்திட
பொன்னையவர் கூடத்தில் வைத்து
57

ரூபன் காத் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரம் யோர்தானின் கிழக்கு கரையில் காணி பெறுதல்.

வெளிமேயும் மாக்களாம் ஆடுமாடு சீரார்
களிதேசம் வேண்டாம் இதுவே -அளித்திடும்

என்றே அவைமுன்னே சொன்னாரே காத்ரூபன்
வன்சொல்லெம் மோசே பகன்றனன் -என்சொல்வேன்

உம்தந்தை போலேதான் நீரும் இடையிலே
எம்நிலமென் போனால் இனத்தாரும் -நம்நிலத்தில்

பேர்மக்கள் போர்செய்யா விட்டார் தமரென்று
போர்தன்னில் போவர் மடிந்துமனம் -சீர்மக்காள்

நீர்செய்யீர் இத்தகைய வன்பாவம் வேண்டாமே
சீர்சொல்லக் கேளிரு மூப்பரும் -நேர்தவனே

எம்மக்கள் எம்மனைவி எல்லாரும் இங்கிருக்க
எம்மக்கள் முன்செல்வோம் போர்வீரர் -நம்மக்கள்

தம்நிலம் காணி பெரும்வரை நாங்களே
உம்உம் அதுநன்றே என்றுரைத்தான் -நும்சொல்

படிநடக்கா போனாலே போவீர்நீர் கானான்
அடிநிலம் தன்னிலே சொத்து -இடையர்சொல்

கேட்டு திருமோசே தந்தனன் காணியாக
நாட்டில் கரையாறு இப்பக்கம் -நாட்டாரில்

மாகீர் மனாசே குலத்தோர்வெல் கீலேயாத்
மாகீர் நிலமாக காத்ரூபன் -மாகீர்

உடன்சேர்த்து ஈரரை நற்குலத்தோர் ஆறின்
நடைக்கீழ் திசையிலே பெற்றார் -திடமாந்தர்

நாட்டை பிடித்து தொழுவங்கள் கட்டினர்
நாட்டின் பெயரையும் மாற்று
58

இசுரேலரின் பயண விவரமும் எரிகோ அக்கரையில் வனாந்தரத்தில் கர்த்தர் தந்த கட்டளையும்

திருக்கர்த்தர் மோசே யிடஞ்சொன்னார் மக்கள்
திருப்பயணத் தின்விவரம் கையால் -திருமகனே

நீயெழுது; கட்டளை பெற்ற திருமகன்
வேயா தெழுதினான் ஆங்குத்தான் -தீயாம்

அடிமை எகிப்தின் கருநாடு விட்ட
அடியார் விடுதலை பெற்றார் -அடித்தார்

திருவும் எகிப்தின் தலைப்பிள்ளை அன்றே
திருமக்கள் விட்டார் எகிப்து -திருமக்கள்

விட்டநாள் சேய்தனை மக்களும் மண்ணிட
விட்டநாள் போனார் சிவக்கடல் -நட்டாரும்

ஒன்றாகச் சேர்ந்தே; திருவும் எகிப்தினது
ஒன்றுதவா தேவர் அழித்தாரே -ஒன்றாக

எண்ணிலா மக்கள் விடுத்தோம் எகிப்தினின்று
விண்ணவர் முன்செல்ல ராமசேசு -மண்விட்டே

எம்மிருவர்க் கைக்கீழ் இசுரேலும் வந்தனரே
தம்முதல் பாசுகா பின்புத்தான் -அம்மா

முதல்மாதம் பத்தோடு ஐந்தாம் திருநாள்
முதலாளர் நாட்டார்காண் விட்டு -முதலிறை

சீர்ப்பலத்த கைச்செய்கை யாலே இசுரேலர்
நேர்வேர் திருப்பயணம் சென்றனர் -சீர்மக்கள்

சுக்கோத்து சென்றடைந்து நின்றார் களைத்ததால்
சுக்கோத்து விட்டவர் ஏத்தாமில் -அக்கடா

என்றே களைப்பில் திருமக்கள் நிற்கவும்
வன்னரசு பின்னும் தொடர்ந்தனன் -அன்னாரும்

ஏத்தாம் வெளிவிட்டு ஈராத் திரும்பிட்டு
ஏத்தாம் வெளிபின்னே மிக்தோலில் -மேத்தவர்

சொல்படியே சென்றார் திருமக்கள், ஆழிமுன்
நல்லாரும் ஓய்வு பெறவிருக்க -சொல்படி

வன்னரசு பின்வர சொல்லவர் கண்போக்க
மன்னனும் கிட்டிச்சே ராதபடி -தன்னே

சிவந்த கடலும் இடைப்பிரிந்து போக
சிவந்த கடலைக் கடந்தார் -அவையோரும்

ஏத்தாம் தொடங்கி மலைசீனாய் வந்திட
மேத்தவ மக்களும் ஏழிடம் -மேத்தவர்

சீனாய் வனம்விட்டு ஏதோம் வனத்தின்ஓர்
போனார் இருபத்தி ஒன்றுநல் -போனயிடம்

ஓர்மலையில் ஆசரியன் ஆரோன் மரித்திட
ஓர்விட்டு சென்றார் திருவவர் -நேர்மக்கள்

ஏழிடம் பின்னர் எரிகோவின் அக்கரையில்
வேழார் இனத்தார் அடைந்தனர் -வேழார்

எரிகோ அருகே இறைவனும் சொன்னார்
திருமக்கள் கேட்க விதிச்சொல் -கரைக்கடந்து

செல்வீர் குடிகள் விரட்டுவீர் ஒன்றுவிடா
சொல்படி சீட்டுபோட்டு பங்காக -செல்லில்

ஒருவரும் விட்டுவைத்தால் அம்மாந்தர் ஆவர்
திருவிழக்க கண்ணிலே முள்ளாய் -கரைக்குடிகள்

உம்விலாவில் கூர்வேலாய் மாறி வதைப்பேனே
உம்மேல் அவர்திட்டத் தீங்கு
59

ஒன்பதரை குலத்தாருக்கான எல்லைகள் மற்றும் கானான் தேசத்தை பங்கிட குலத்தலைவர்களை தேவன் பெயர் பெயராக தருதல்.

திருக்கர்த்தர் மோசேயை நோக்கி: மகனே,
திருவினத்தார் கேட்கச்சொல் நன்றே -திருவினம்சேர்

நற்றேசம் கானான் தருகின்றேன் உம்மினங்கை;
நற்றேச எல்லைகள் தந்தாரே -நற்றவரும்

தென்திசையில் எல்லையோ சீன்தொடங்கி ஏதோம்சேர்
அன்றியும் உப்புக் கடற்கடைசி -தென்னெல்லை

தென்புற அக்ராபீம் மேடுசுற்றி சீனும்போய்
தென்புற எல்லை தொடர்ந்தவர் -வன்வனமாம்

சீன்வனம்போய் காதேசு பர்னேயா ஆத்சாரும்
நன்றே அசுமோனா போயெகிப் -தின்னாறு

தென்திசை சுற்றி முடியும் கடலிலேதான்
தென்னெல்லை தந்தார் திருவங்கு -நன்றாம்கேள்

மேற்றிசைக்கு பேர்கடலே எல்லையாம் மேற்றார்சொல்
மேற்றசை எல்லை குறித்தவர் -மேற்றார்

வடக்கினது எல்லை பகன்றார் கடலின்
வடவெல்லை தானும் தொடங்க -வடக்கில்

கடல்முதல் ஓர்மலை ஆமாத் வழிவை
நடவெல்லை சிப்ரோன்போய் ஆத்சார் -கடையேனான்

தன்னில் முடியும் வடக்கெல்லை தானேயென்
நன்றாக எல்லைக் குறித்தவர் -அன்றியும்

நற்குறி ஆத்சார் கடையேனான் சேப்பாமை
நற்குறித்து ஆயின் கிழக்கிலுள்ள -நற்றேசம்

ரிப்லா முதலாக கின்னரேத் யோர்தானும்
உப்பாழி எல்லை கிழக்குதிசை -அப்போது

மோசே திருவினத்தார் நோக்கி: திருவினமே
தேசத்தின் எல்லைகள் கேளீரோ -தேசமது

ஒன்ப தரைக்குலம் காணியீதே நற்றேசம்
சொன்னான் திருயெல்லை கள்யீதே -நன்றாய்

மனாசேயின் பாதியோர் ரூபன்காத் பெற்றார்
தனதின்கண் காண்நன் னிலமே -அனைவரும்

கேளிரே எல்லையிது ஒன்ப தரைகுலத்தின்
கேளிர் செவிக்கேள் உரைத்தனன் -வேளை

திருக்கர்த்தர் மோசேயை நோக்கி: மகனே,
திருவினம்சேர் நன்னிலம் பங்கு -திருவிருவர்

யோசுவா ஆசன் எலியாசர் பங்கிடுவர்
தேசத்தை நன்றாக பத்துகுலம் -தேசத்தில்

ஒன்ப தரைகுலத்தோர் தன்னின் தலைவர்கள்
நன்றாகச் சொன்னார் திருவும்தான் -அன்றே

பெயர்தந்தார் சீராண்கள் தேசத்தார் பத்து
பெயர்பெயராய் மோசே எழுது
60

லேவியர்களுக்காக நாற்பத்தெட்டு நகரங்களை இசுரேல் இனத்தின் காணியில் இருந்து பிரித்து தரச்சொல்லி, அதில் ஆறு பட்டிணங்களை அடைக்கலப்பட்டினங்களாக நியமிக்க கர்த்தர் பணித்தல்.

எரிகோ அருகே நதியோர்தான் மோவாப்
சரிசம நல்வெளியில் கர்த்தர் -சரியாணாம்

மோசே தனைநோக்கி: சொல்வாய் இசுரெலின
தேசத்தார் லேவிக்காய் நன்னகர் -தேச

இசுரேல் இனத்தாரின் காணியில் லேவி
இசைக்குல மாந்தர்க்கு தாவென் -றிசைக்குலத்தார்

பெற்றிட வேண்டிய நன்னகர்கள் நாற்பதும்
நற்றெட்டும் தானே நகர்எண்ணி -மற்றும்

வெளிநிலம்சேர் நன்னகர்கள் தந்திடச்சொல் சீராய்
வெளிநிலம் ஆயிரங்கை நீளம் -வெளிநிலம்

தென்மேற் வடகீழ் நகர்நடு வைத்தேசீர்
நன்றாய் அளவு முழமாக -அன்றியும்

மேய்ச்சல் நிலமாய் நகரவைச் சுற்றிலும்
மேய்நில மீரா யிரமுழம் -சேய்லேவி

மக்களுக்கு தந்திடச் சொல்வாய் குறித்தங்கு
தக்கார் சிறப்பாணை யிட்டாரே -தக்கவர்

அந்நகரில் ஆறு அடைக்கலஞ் சேர்நகரே
அந்தபடி கானானில் மூன்றாக -இந்தபுறம்

யோர்தானில் மூன்றே கொடுமின் அடைக்கலஞ்
சேர்நகர்கள் தன்னை குறித்திடு -சீர்நேர்

இசுரேல் இனத்தார் பெறும்பங்கில் தானே
இசைக்குல மக்கள் நகரை -இசைவாய்த்

தரச்சொல் நிறைபெற்றோர் பேராக மற்றோர்
தரச்சொல் குறைவின் படிதான் -வரையில்

அடைக்கல நன்னகருள் கொன்றிட்ட மாந்தன்
அடைக்கலமாய் சேரச்சொல் ஆங்கு -அடைக்கல

நன்னகர் கைப்பிசகாய் கொன்றோன் அடைக்கலமே
அன்றியும் திட்டகொலைக் கில்லைகேள் -வன்னாய்

எதிர்க்க முகாந்திர மின்றி எதிர்ச்சை
அதிர்வாகி கொன்றோன் அடைவான் -எதிர்பழி

வாங்கத் துடிக்கும் தமன்கை விழாவண்ணம்
தாங்கிடும் நன்னகர் தான்
61

கொலைப்பழி தீர்த்தல் மற்றும் அடைக்கலப் பட்டிணங்களின் நியாயவிதிப் பிரமாணம்

மரவா யுதமோ இரும்பாலோ தட்டி
மரணம் வருமென் மரணம் -தரக்கொலைச்

செய்தோன் உதிரம் விழவேண்டும் நாட்டிலே
செய்ப்பழி வாங்குவோன் கையில்தான் -மெய்யாய்

மறைந்திருந்து மாந்தன் எதிரியைக் கொன்றால்
மறைந்திருந்து கொன்றவனைக் கொல்க -கறைநீக்கு

நாட்டுள் உதிரம் கறைசிந்தல் தன்னிற்கு
நாட்டில் உதிரமே மாற்றாமே -நாட்டில்

அடைக்கலம்சேர் மாந்தன் பழிதீர்க்க ஆகா
அடைக்கல நன்னகர் விட்டு -இடையிலே

வந்திடப் பார்த்து பழிவாங்கும் மாந்தனும்
அந்தவேளை கொல்பழி யில்லைகாண் -அந்தபடி

சான்றுகள் ஒன்றிற்கும் மேலாய் இருந்திட
சான்றுகள் கைபிசகில் கொன்றானென் -சான்றுகள்

சொல்படி கொன்றவனை நட்டான் பழிவாங்க
அல்லனை தாருமவைத் தீர்த்திட்டு -அல்லான்

அடைக்கலம் சேர்ந்தோன் அவையின்நற் தீர்ப்பில்
அடைக்கலம் சேர்ந்தோன் தவறில் -அடைக்கல

நன்னகருள் தானே தரித்திடச்சொல் தைலதலை
நன்னாசன் சாகும் வரைதானே -என்றேனும்

நன்னாசன் செத்தப்பின் காணிக்கு வந்திடலாம்
வன்னிலா கைப்பிசகாய் கொன்றோனும் -நன்னகர்

விட்டு கொலைப்பழி நீங்கிடும் அப்போது
நட்டார் கடைப்பிடியும் சீர்மக்காள் -நட்டாரே

வாங்காதீர் கொன்றவன்கை எப்பொருளும் ஈடாக
வாங்கிடச் செய்யாதீர் தீர்ப்புதான் -வாங்காதீர்

நன்னகர் விட்டுவெளி வந்திடவும் கைப்பொருளை
நன்னகர் தன்னில் தரித்திடச்சொல் -அன்றியும்

உம்நடுவே வாசம்செய் நற்கர்த்தர் யானேகேள்
எம்வீடாம் தேசத்தை தீட்டாக்கா -நும்செயலால்

நல்லுதிரம் சிந்திட்டால் நாடுபோகும் தீட்டாக
அல்ல தகற்றும் இனம்
62

பெண்கள் பெரும் காணி குலத்தை விடாதிருக்க குலத்துள்ளேயே மணம்புரிய கர்த்தரின் கட்டளை

கானான்செல் யோசேப்சேய் நல்மனாசே மக்களவர்
மேனாணாம் மோசே யிடம்வந்து -மேனாணே

சீரவர் சீட்டுபோட்டு பங்கிடச் சொன்னாரே
நேராணே எம்வழக்கும் கேட்பீர் -கரைப்பின்

செலோபியாத்தின் பெண்களுக்கு காணிதர சொன்னீர்
செலோபியாத்தின் பெண்கள் குலவிட் -டலைந்தே

குலவேற்றில் காணிகொண்டால் யூபிலி போதும்
குலவேறாய் போகுமே பங்கு -குலங்கேள்

திருவவன் கர்த்தர்சொல் கேட்டு: குலமே
திருக்கர்த்த சொல்கேள் மணமாய் -திருக்குலம்

விட்டால் திருக்குல காணியது போய்விடும்
விட்டிவிடா தேயுள் மணம்செய்வீர் -விட்டிவிடா

தப்படியே நற்பெண்டிர் ஐவரும் தந்தைகுலந்
தப்பாது செய்தார் மணமுந்தான் -தப்பாது

காணி நிலம்வேண்டும் என்போர் குலத்துள்ளே
காணி யிருக்க மணம்செய்வீர் -மாணான்

எரிகோ அருகே சமவெளி தன்னில்
சரியாணாம் மோசேக்கு தந்த -சரிநேமம்

கட்டளைகள் தன்னை திருமோசே தந்திட்டான்
நட்டார்க்கு செய்ய விதி
63

Comments

Popular posts from this blog